![]() |
அரசும் மக்களின் வாழ்வியல் தரமும் |
ஒரு உண்மையான அரசு தன் குடிமக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்துவதையே முதற்கட்ட செயல்பாடாக கொண்டிருக்க வேண்டும். வாழ்வியல் தரமா?அப்படி என்றால் என்ன?அவை எப்படி உயரும் என்று பலரும் யோசிக்கலாம்.ஆகவே அவை சம்மந்தமான ஒரு சில விஷயங்களை இங்கு நான் விவரித்துவிடுகின்றேன்.அன்பர்களே..!முதலில் வாழ்வியல் தரம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
வாழ்வியல் தரம் என்றால் என்ன?
நாட்டின் குடிமக்கள் பசி,பட்டினியின்றி இருப்பிட வசதியுடன் பாதுகாப்பாக வாழ்வதே முதற்கட்ட வாழ்வியல் தரம் என்று சொல்லப்படுகின்றது.ஏனெனில் இவையே ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை தேவையாக இருக்கின்றது. பண்டைய காலத்தில் இந்த அடிப்படை தேவைகளான உணவு ,உடை, இருப்பிடம் போன்றவற்றை தேடிக்கொள்ளவே மக்கள் தங்களுக்கு மத்தியில் சமூகத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டனர்.பிறகு அந்த சமூகத்தொடர்பு என்பதே ஒருவர் மற்றொருவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக தங்களிடம் உள்ள பொருட்களை பரிமாரிக்கொள்ள தூண்டியது.
பிறகு அந்த பொருள் பரிமாற்றமே அன்றய பொருளாதார வியாபாரமாக பார்க்கப்பட்டது.இவ்வாறுதான் வியாபாரம் என்பது பரினாம வளர்சிபெற்று இன்றைக்கு நாம் பார்க்கும் டிஜிட்டல் வர்த்தகம் வரை வந்தடைந்துள்ளது. என்றாலும் அன்றய மக்கள் விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் தேவை பறிமாற்றத்தை செய்துகொள்ள தானியங்களையே பொருளாதார மதிப்பீட்டு அளவாக பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.ஏனெனில் உணவே அன்றய மக்களின் பெரும் தேவையாக இருந்திருக்கின்றது.
பிறகு சிறுகுறு அரசர்கள் அதனை மொத்தமாக கையகபடுத்தி மக்களின் தேவைக்கேற்ப வழங்கி வந்திருக்கின்றனர்.அதன் பின் தங்கம்,வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றதால் அவை அரசர்களால் நாணயங்களாக உறுக்கி மக்களின் பொருள் பறிமாற்றத்திற்கான அளவீடாக வழங்கப்பட்டது.அதன் பிறகு அரசின் கஜானாக்களில் அவைகளெல்லாம் சேகரிக்கப்பட்டு அதற்கான மதிப்பு தொகை சீட்டாக அரசின் மூலம் அச்சடிக்கப்பட்டு அரசின் பத்திர சீட்டாக வழங்கப்பட்டது.இதனையே இன்றய பணச்சீட்டாக இன்று நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
ஆக குறிப்பிட்ட ஒரு காலம் வரை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் விவசாயத்தையே நம்பியிருந்தனர்.அதுவே அவர்களின் அடப்படை வாழ்வியல் தரமாகவும் இருந்தது.ஆனால் இன்று மக்கள் தங்களின் முக்கிய வாழ்வாதாரமான உணவு,உடை,இருப்பிடம் இவற்றையெல்லாம் தரும் விவசாயத்தை விட்டுவிட்டு அரசால் அச்சடித்து வழங்கப்படும் பணச்சீட்டின் பக்கம் திருப்பப்பட்டிருக்கின்றனர்.இந்த பணச்சீட்டு எங்கு அதிகம் பெறப்படுமோ அதை நோக்கியே மக்களும் திருப்பிவிடப்பட்டுள்ளனர்.
இதனால் இன்றைய பெரும்பான்மையான நாட்டின் மக்கள் அடிப்படை வசதிகளையும்கூட பெற முடியாமல் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கண்ணோட்டமாகும்.ஆக பணம் சம்மந்தமான விளக்கங்களை பின்வரும் கட்டுரைகளில் நான் விளக்குகின்றேன்.இப்பொழுது நம்நாட்டில் மக்களின் அடிப்படை தேவைகள் எந்தளவு பூர்த்தி செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்பதை சற்று சுருக்கமாக விவரிக்க முயலுகின்றேன்.
நம் நாட்டின் 75 % மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.மேலும் 20 % மக்கள் நடுத்தரவாதிகளாகவும் 5% மக்கள் உயர் மட்டத்திலும் காணப்படுகின்றனர். இந்த 75 % மக்கள் பெரும்பாலும் அன்றாடம் உழைத்து உண்ணுபவர்களாகவே காணப்படுகின்றனர்.இவர்களுக்கான அடிப்படை வசதிகளைகூட இவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியாத அளவிற்கே இவர்களின் வாழ்வின் தரம் அதளபாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றது.
20 % மக்கள் என்பவர்கள் சிறுகுறு வருமானங்களின் மூலம் தங்களின் அன்றாட வாழ்வை சிறிய கடிணத்துடன் கடத்துகின்றனர்.5 % மக்கள் தங்களின் வாழ்வை சுக போகமாக கழிக்கின்றனர்.இவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்பதே நிதர்சனமாகும்.இந்த கட்டமைப்பு எவ்வாறு ஏற்பட்டது.?ஏன் 5 % சதவிகித மக்கள் மட்டுமே பொருளாதாரத்தில் உயர் மட்டத்திலேயே இருக்கின்றனர் என்ற கேள்வி நம்மில் ஒவ்வொருவருக்கும் எழவேண்டும்.அப்படி உங்களிடமும் இக்கேள்வி எழுமேயானால் அதற்காக நான் மிகவும் பெருமைபடுகின்றேன்.
அன்பர்களே..!அதற்கு முக்கிய காரணியாக நான் பார்ப்பது இன்றைய பண பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வே என்று என்னால் உறுதியாக கூற முடியும்.சுருங்கக் கூறினால் அரசின் சீரற்ற பொருளாதார நடவடிக்கையே மக்களின் பொருளாதார வீழ்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.அது என்ன சீரற்ற பொருளாதார நடவடிக்கை ,? சீரான பொருளாதார நடவடிக்கை? என்று யோசிப்பீர்களேயானால் அவற்றிற்கு என்னுடைய ஒற்றை பதில் "பண முதலைகளின் முதலாளித்துவம்"என்பதேயாகும்.
உண்மையில் உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டுப்பாருங்கள்.மன்னர் ஆட்சி,மற்றும் அரசர் ஆட்சி என்பதெல்லாம் பரினாம வளர்ச்சி பெற்று இன்று மக்களே தனக்கான மக்களாட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கான நிலை வந்துவிட்டிருந்தாலும்,ஏன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பொருளாதாரத்தில் அதலபாதாலத்திலேயே கிடக்கின்றனர்.?இந்த மக்களுக்கான ஆட்சி எங்கு தோற்றுப்போய்நிற்கின்றது என்பதை சற்று உள்னோக்கிப் பார்ப்பீர்களேயானால்,உங்களால் வெட்ட வெளிச்சமாக கண்டு கொள்ள முடியும்.நம் நாட்டின் பொருளாதார கோட்பாடு சீரானதாக இல்லை என்பதையும்,அவை ஒரு சில பேராசை கொண்ட முதலைகளுக்கு மட்டுமே சேவகம் செய்யும் அடிமையாக இருந்து வருகின்றது என்பதையும் கண்ஊடாக புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய நிலையைத்தான் இங்கு "முதலைகளின் முதலாளித்துவம்"என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.பண பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் வளத்தையும் மக்களின் வாழ்வியல் தரத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய அரசு பல சமயங்களில் அதனை தங்களுக்கு நெருக்கமான பேரசை பேர்விழிகளிடம் கொடுத்து அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தீணிபோட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மல்லையா போன்ற பல ஆயிரம் கோடீஸ்வரர்களே.அவர்களுக்கெல்லாம் இந்த அரசு கேள்வி கணக்கின்றி வங்கிகளின் மூலம் பணத்தை வாரி இறைப்பதற்கு இன்றும் தயாராகவே உள்ளது.ஆனால் ஒரு ஏழை தனக்கான கடனை எந்த அடமானமுமின்றி பெற்றுவிட முடியாது என்பதையே அடிப்படை விதியாக்கி வைத்திருக்கின்றது. இப்படி பல்வேறு உதாரணங்களை அரசின் பணபரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாள்விற்கு உதாரணமாக கூறலாம்.ஆனால் அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவது என் நோக்கமல்ல.
மாறாக அரசு தன் பணபரிமாற்றத்தை அடித்தட்டு மக்களிடமிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும் என்பதும்.அடித்தட்டு மக்களுக்கான பொருளாதார தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோலாகும்.இவற்றை செய்ய முன்வரும் ஒரு அரசே சிறந்த அரசாக இருக்கின்றது.அத்தகைய அரசுதான் மக்களுக்கான அரசு என்றும் நான் நம்புகின்றேன்.ஆக அன்பர்களே.!இந்த கட்டுரையின் விரிவு கருதி இதனோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.அடுத்த கட்டுரையில் அரசு எவ்வாறு பேராசை கொண்ட முதலாளித்துவத்திற்கு அதிகார ரீதியில் அடிபணிந்து பொருளாதாரத்தில் ஓரவஞ்சனை செய்கின்றது என்பது சம்மந்தமாகவும் அதனால் ஏனைய குடிமக்கள் எப்படி எல்லாம் பின்தள்ளப்படுகின்றனர் என்பது சம்மந்தமாகவும் விவரிக்கின்றேன்.