![]() |
வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading) |
வாசிப்பு ஒருவன் தன்னை செம்மைபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.யார் வாசிப்பை தொடர்ந்து கடைபிடித்து வருவாரோ அவரை வெள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்றே நான் கருதுகின்றேன்.வெளிப்படையாக கூற வேண்டுமானால் இன்றைய தலைவர்கள் அனைவரும் நேற்றைய வாசிப்பாளர்களே.ஆம்..!புத்தகங்களை வாசிப்பதின் மூலம் மட்டுமே சமூகத்தில் ஒரு சிறந்த மனிதன் உறுவெடுக்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.ஏனென்றால் புத்தகங்கள்தான் முந்தைய வரலாறுகளையும் அனுபவங்களையும் சுமந்து வந்து பிந்தைய சமூகத்திற்கு அழகுற படிப்பினையை போதிக்கும் அற்புத கருவியாக இருக்கின்றது.
யார் அவற்றின் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்களே தன் சமூகத்திற்கான சிறந்த தலைவர்களாக தங்களை உறுவாக்கி கொள்ளவும் செய்கின்றனர்.யார் அவற்றை உதாசினப்படுத்துகின்றார்களோ அவர்கள் சமூகத்தில் மூடர்களாகவே வலம்வர விரும்புகின்றனர்.புத்தக வாசிப்பு என்பது உண்மையிலேயே ஒரு தனி உலகமாகும்.அது அறிவும், சிந்தனையும்,அனுபவங்களும் மட்டுமே பூத்துக்குழுங்கும் ஒரு அற்புத சோழையாகும்.அதற்குள் நுழைந்துவிட்டால் வண்ண வண்ண பூக்களும், அருசுவை மிகுந்த கனிகளும் நம்மை திக்குமுக்காட செய்துவிடும்.
இதனால் அதற்குள் நுழைந்துவிட்டவர்களால் மிக எளிதில் அதனைவிட்டும் வெளியேறிவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.ஏனெனில் அறிவு தாகம் என்பது அணைபோட முடியாத பேரழையாக இருக்கின்றதல்லவா. லட்சோப லட்ச புத்தக வடிவங்களில் வைரமும்,வைடூரியங்களும் நம் கண்களுக்கு முன்பே கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் நம்மில் பலரும் வீண் வேடிக்கையெனும் கூலாங்கற்களையே நமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது வேதணையான விஷயமாகும்.
எனக்கு தெரிந்து மிக அற்புதமான (டைம் பாஸ்) நேர கழிப்பு என்பது புத்தக வாசித்தலாகவே இருக்கின்றது என்றே நான் கூறுவேன்.ஏனெனில் நம் நேரமும் பயனுள்ள முறையில் கழிந்துவிடுகின்றது.மேலும் நம் ஆன்மாவிற்கு அறிவூட்டிய கடமையும் நமக்கு நீங்கிவிடுகின்றது.அண்பர்களே சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.!வாசிப்பு என்பது நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை தரக்கூடியதுதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
வாசிப்பின் பலன்கள்.
1.சிறந்த வழித்துணையாக இருக்கும்.
2.சிந்தைனையை சுறுசுறுப்பாக்கி வைக்கும்.
3.மனதை உத்வேகப்படுத்தும்.
4.கற்பனைத்திறனை அதிகரிக்கச் செய்யும்.
5.மொழி புலமையை அதிகரிக்கச் செய்யும்.
6.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
7.மன அமைதியை தரும்.
8.கவனச் சிதறல்களைவிட்டும் பாதுகாக்கும்.
9.மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.
10.அன்றாட நிகழ்வுகளை அறியச் செய்யும்.
மேற்கூறிய இந்த பத்து காரணங்களில் எக்காரணத்திற்காக வேண்டுமானாலும் நீங்கள் புத்தகங்களை வாசியுங்கள்.ஏனெனில் அனைத்தும் நம் வாழ்கைக்கு அவசியமானதே என்றே நான் நம்புகின்றேன். இறுதியாக ஒன்றை நான் கூறிக்கொள்கின்றேன்.இயந்திரத்தனமான உங்கள் உடலுக்கான வாழ்வை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் ஆன்மாவிற்கும் வாசிப்பு என்னும் வரப்பிரசாதத்தை சற்று விருந்தளியுங்கள்.!
இக்கட்டுரையின் விரிவு கருதி இத்தோடு இக்கட்டுரையை முடித்துக் கொண்டு பின்வரும் கட்டுரையில் புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது என்பது குறித்தும் அதனால் நம்மிடம் ஏற்படும் பலன்கள் குறித்தும் விவரிக்கின்றேன்.