![]() |
மூளையை எவ்வாறு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது |
நம்மை பார்த்து நம் பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ என்றாவது ஒரு நாள் உனக்கு மூளையே இல்லையா? என்றோ அல்லது ஆள்தான் வளர்ந்திருக்கின்றாய் ஆனால் மூளை வளரவே இல்லை என்றோ திட்டிய அனுபவம் கட்டாயம் இருந்திருக்களாம் .அப்பொழுது மூளை வளருமா..?என்றும் கூட நாம் யோசித்திருக்களாம்.ஆம் அண்பர்களே தலையில் காணப்படும் மூளை என்பது வளரும் தன்மைமிக்கதே என்றே பல்வேறு ஆராய்ச்சியாளார்களும் குறிப்பிடுகின்றனர்.மேலும் அது சிறப்பாக வளர்வதற்கென்று சில பயிற்சிகளும் உண்டு என்றும் குறிப்பிடுகின்றனர்.
அப்பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு மூளையின் வளர்ச்சியை எதன் அடிப்படையில் அளவிடப்படுகின்றது என்பதைப்பற்றியும் அறிந்து கொள்வோம்.ஒருவரின் மூளையின் வளர்ச்சி என்பது அவருடைய சிந்தனையையும்,கவனத்தையும் வைத்தே அளவிடப்படுகின்றது.ஏனெனில் ஒருவரின் மூளை வளர்வதற்கு ஒரு பொருளின் உண்மைத் தன்மையை சிந்திப்பதும்,சிந்தித்த அதனை விளக்கி சொல்வதும் மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.
யாருக்கு ஒரு பொருளை இன்ன பொருள் என்று அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லையோ அவருடைய மூளை வளர்ச்சிபற்றாத மூளை என்பதாகவே அறிவியல் உலகில் கருதப்படுகின்றது.எனவே நம் மூளை வளர்வதற்கு நம்முடைய சிந்தனையே முதல் அடிப்படை காரணியாக இருக்கின்றது என்பதால் அதனையே நம்முடைய மூளையின் வளர்சிக்கான அளவுகோளாக பார்க்கப்படுகின்றது.
2. ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்துவதும் நம் மூளையின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோளாகும்.யாருக்கு ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்த முடியவில்லையோ அவரும் அறிவியளாலர்களால் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே பார்க்கப்படுகின்றார். ஏனெனில் ஒரு பொருளை இன்னது என்று அறிவதற்கு முதலில் அப்பொருளில் கவனம் செலுத்தும் தன்மை அதிகமாக இருக்க வேண்டும்.அது இல்லையெனில் அவர் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே கருதப்படுவார் என்றே மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர்.
ஆக ஒரு மனிதனின் சிந்தனை மற்றும் கவனம் இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே ஒரு மனிதனின் மூளையின் வளர்ச்சி அளவிடப்படுகின்றது.இந்த இரண்டையும் சீராக்குவதற்கு பல்வேறு பயிற்சிகளை நம் அறிஞர்கள் கற்றுக் கொடுக்கின்றனர்.
அவற்றில் சிலவற்றை இப்பொழுது நாம் பார்ப்போம்.
மூளை வளர்ச்சிக்கான பயிற்சிகள்:
1. நாம் நம்முடைய கவனத்தையும்,சிந்தனையையும் சீராக்குவதற்கே வணக்க வழிபாடுகளும்,அதில் மொழியப்படும் மந்திரங்களும் உறுவாக்கப்பட்டது என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.இன்றைய பெரிய மதங்களாக பார்க்கப்படும் அனைத்து மதங்களும் அவற்றின் வணக்க வழிபாடாக பெரும்பாலும் சிந்தனையை ஓர் முகப்படுத்துவதையே கற்றுக்கொடுக்கின்றது என்பதும் நிதர்சனமான உண்மையேயாகும்.
எனவே நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் ஓர் முகப்படுத்த வணக்கங்களே மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கின்றது.அதனை நாம் தொடர்ந்து கடைபிடித்து வருவோமேயானால் நம்முடைய சிந்தனையும் கவனமும் நிச்சயமாக நம்முடைய கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ள முடியும்.
2. இரண்டாவதாக மூச்சு பயிற்சி செய்வதும் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்குகின்றது என்பதாகவே பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.உதாரணமாக இன்றைய யோகா போன்ற உடற்பயிற்சி கலையில் இந்த மூச்சுப்பயிற்சி என்பதும் வழங்கப்படுகின்றது.அதாவது மூச்சை நாம் கவனிப்பதின் மூலம் நம்முடைய கவனம் மற்ற விஷயங்களை விட்டும் தூரமாவதாகவும்,மேலும் அதனால் நம்முடைய எண்ண ஓட்டங்கள் சீராகுவதாகவும் கூறப்படுகின்றது.ஆக மூச்சு பயிற்சியின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனைகளையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.
3.அழகாக காணப்படும் இயற்கை இடங்களை அவ்வப்பொழுது சந்தித்து வருவதாலும் நம்முடைய சிந்தனை புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்றே அதிகமான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது புதுபுது இடங்களுக்கு நாம் செல்வதால் நம்முடைய மூளையில் புதிய ஹார்மோன்கள் சுரந்து அது நம்முடைய சிந்தனையை புத்துணர்வுமிக்கதாக ஆக்குகின்றது என்று அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே புதிய இடங்களுக்கு பயணம் செய்வதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக் கொள்ள முடியும்.
4.நல்ல வாசனை திறவியங்களின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது ஒரு நல்ல வாசனை நம்முடைய மூளையில் பல்வேறு புதிய ஹார்மோங்களை சுரக்கச்செய்கின்றது என்றும் அதனால் நம்முடைய மூளை மிக சுறுசுறுப்பாகின்றது என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நல்ல வாசனை திறவியங்களை பயன்படுத்துவதின் மூலம் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.
5.நல்ல ராகங்களை கேட்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்துணர்ச்சிமிக்கதாக ஆக்க முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது இனிமையான ராகங்கள் நம் மனதை வருடி பிறகு அது நமக்குள் பல்வேறு புதிய சிந்தனைகளை உறுவாக்குகின்றது என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்க நாம் நல்ல ராகங்களை கேட்பது மிகச்சிறந்த வழிமுறையாகும.
6.நல்ல புத்தகங்களை படிப்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது வாசிப்பு என்பது நாம் நம்முடைய மூளைக்கு போடும் தீணியைப்போன்றதாகும்.அதனை நம்முடைய மூளை எந்தளவிற்கு பெறுகின்றதோ அந்தளவிற்கு அது புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்பதாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்வதற்கு புத்தகங்கள் வாசிப்பது என்பது மிகச்சிறந்த வழிமுறையாகும்.
இந்த ஆறு வழிமுறைகளும் நாம் நம்முடைய சிந்தனையை சீராக வைத்துக்கொள்வதற்கும்,நம்முடைய கவனத்தை செம்மைபடுத்திக் கொள்வதற்கும் மிக உதவியாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.முடிந்தளவு நீங்களும் கடைபிடித்து வாருங்கள்.