![]() |
தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள் |
ஒருமுறை ஒருதுறவி தன் புதிய மாணவனை அழைத்துக் கொண்டு ஆற்றில் துணி துவைக்கச்சென்றார்.துணியை துவைத்துக் கொண்டிருந்தபொழுது ஒரு தேள் தண்ணீரில் தத்தளிப்பதை அந்த துறவி கண்டார்.உடனே அதனை கையில் பிடித்து கரையில்விட்டார்.ஆனால் அத்தேளோ அவரை கையில் கொட்டிவிட்டது.வலியை பொறுத்துக்கொண்ட அத்துறவி மீண்டும் தன் துணிகளை துவைக்கத்தொடங்கினார்.ஆனால் மீண்டும் அத்தேள் தண்ணீரில் இறங்கி தத்தளிக்க தொடங்கியது.மீண்டும் அத்துறவி அத்தேளை பிடித்து சற்று தூரமான இடத்தில் விட்டுவிட்டு வந்தார்.அப்பொழுதும் அந்த தேள் அவரை கொட்டிவிட்டது.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த சீடன் துறவியே அது உங்களை திரும்ப திரும்ப கொட்டியும் அதனை ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் காப்பாற்றினீர்கள்?அதனை அப்படியே விட்டிருந்தால் செத்து மடிந்திருக்குமல்லவா?என்று கோபத்துடன் கேட்டான்..!அப்பொழுது துறவி புன்னகைத்துக் கொண்டே கொட்டுவது அதனுடைய பண்பு ஆனால் அது ஆபத்தில் உள்ள போது அதனை காப்பது என்னுடைய பண்பு என்று விளக்கமளித்தார்.மேலும் உனக்கு தீங்கிழைப்பவர்களை நீ ஆபத்தில் கண்டால் உடனே உதவிவிடு அது தான் இன்று நான் உனக்கு கற்றுத்தரும் முதல் பாடமாகும் என்றும் கூறினார்.
நீதி:
நமக்கு தீங்குசெய்துவிட்டவர்கள் அழிந்து போய்விட வேண்டும் என்ற வன்மம் இன்றைய மனிதர்களிடம் அதிகம் காணப்படுவது மிகப்பெரும் கை சேதமாகும்.மன்னிப்பதற்கோ மறப்பதற்கோ மனமில்லாத மனிதர்களே அதிகம் காணப்படுகின்றனர் என்பதும் நிதர்சனமாகும்.அண்பர்களே எல்லோருக்கும் நலவையே நாடுங்கள்.முடிந்தளவு தீங்கிழைத்தவர்களுக்கும் நலவையே நாடுங்கள்..!