![]() |
புத்தரின் பார்வையில் இருள் |
இந்த உலகில் இருளைப்பற்றி யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்..!ஐயோ இருளா..?அது பயங்கரமானது..!மனிதர்களை அச்சுருத்தும் ஆபத்தானது..!வெறுட்சி நிறைந்தது.அவ்வளவு ஏன் நம் பார்வைகளின் ஒழியை இழக்கச் செய்துவிடும் கொடூர சக்திகொண்டது என்று அவரவர்கள் இந்த இருளைப் பற்றி என்னவெல்லாம் யோசித்து வைத்திருப்பார்களோ அத்தனையையும் கொட்டி தீர்த்துவிடுவார்கள்.மேலும் பலரோ இருளைப்பற்றி பேசுவதற்கே விரும்பமாட்டார்கள் என்பதே நான் அறிந்த உண்மையாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த உலகின் மகத்தான மனிதனாய் பார்க்கப்பட்ட புத்தர் இருளைப்பற்றி மிக விரிவாக பேசியிருக்கின்றார்.சற்று செவிதாழ்த்தி கேளுங்கள்..!
புத்தரின் பார்வையில் இருள் என்றால் என்ன?
அவர் இருள்தான் உண்மைத்தன்மைமிக்கது என்று குறிப்பிடுகின்றார்.மேலும் அதுதான் நிரந்தரத்துவமிக்க நித்தியமானது என்றும் குறிப்பிடுகின்றார். மனிதன் அதனைவிட்டும் எவ்வளவு தூரம் கடந்து சென்றாலும் அவனால் அந்த இருளை தோற்கடிக்கவே முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.அவ்வாறே வெளிச்சம் என்பது தற்காலிகமாக உறுவாக்கப்பட்ட ஒரு மாற்றுசெயல் என்பதாக விவரிக்கின்றார்.அது எந்த ஆற்றலையும் தன்னகத்தே கொண்டதல்ல என்றும் அது மற்றொரு புறத்திலிருந்து தோன்றிமறையும் தற்காலிக இடம்பிடித்த ஒரு பொருள் என்கிறார்.
இதனாலேயே தன் சீடர்களிடம் தன்னை ஒரு அனைந்துவிட்ட விளக்கு என்பதாக கூறுகிறார்.ஏனென்றால் விளக்கு என்பதுதான் நித்தியமானது என்றும் அதில் தோன்றும் வெளிச்சமானது நிரந்தரமற்றது என்றும் விவரிக்கின்றார்.ஆனால் மக்களில் பெரும்பாலானோர் வெளிச்சம்தான் நிஜம் என்று எண்ணிக்கொண்டு அதன் பின்னேயே ஓடிச்செல்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்.அவ்வாறே வெளிச்சத்தை மக்களின் கூட்டு வாழ்க்கைக்கு ஒப்பாகவும் இருளை தனிமனித வாழ்க்கைக்கு ஒப்பாகவும் ஒப்பிட்டுக் காண்பிக்கின்றார்.மக்களில் பெரும்பாலானோர் தனிமையின் பயத்தால் இந்த உலகில் யாரையாவது ஒரு உறவை எப்பொழுதும் தேடிக்கொண்டே செல்கின்றனர் என்றும் நிரந்தரமான தனிமனித வாழ்வை கற்க மறந்து விடுகின்றனர் என்றும் கவலையுறுகின்றார்.
அவ்வாறே வெளிச்சத்தை உயிரிற்கும் இருளை மரணத்திற்கும் ஒப்பாக குறிப்பிட்டு காண்பிக்கின்றார்.உயிர் என்பது இன்று உண்மையானதாக இருக்கலாம்.ஆனால் மரணமே என்றும் நிஜமானது என்பதை ஆழமாக சுட்டிக்காண்பிக்கின்றார்.மனிதன் இருளைவிட்டும்,தனிமையைவிட்டும், மரணத்தைவிட்டும் தூரமாக ஓடுவதாக இந்த உலகில் காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவைகள் அனைத்தும் அவனுடைய வாழ்வில் நிஜமான இடத்தை பிடித்திருப்பதால் இறுதியில் அவனே அதற்கு முன்பு வந்து மண்டியிட்டு சரணடைந்துவிடுவான் என்பதாக குறிப்பிடுகின்றார்.
நீதி:
அண்பர்களே..!நிஜமற்ற இந்த வாழ்வில்தான் என்ற கர்வத்தோடு தன்நிலைமறந்து செயல்படமுற்படாதீர்கள்.உறவுகள் சொத்துக்கள்,சுகங்கள் அனைத்தும் நம்மை நிரந்தரமாக்கி வைக்கக்கூடியது என்ற மமதையில் உங்கள் வாழ்வை நீங்களே அழிவில் போட்டுக்கொள்ளாதீர்கள்.எறியும் விளக்காக இருங்கள் அது தவறில்லை.ஆனால் அதுவே நிரந்தரம் என்று எண்ணிவிடாதீர்கள்.வாழ்வின் உண்மைகளை அசைபோடக் கற்றுக் கொள்ளுங்கள்.அது நிரந்தமற்ற பொய்களுக்கு பின்னால் ஓடுவதைவிட்டும் தானே உங்களை நிறுத்திவிடும்..!
நன்றி: