வியாழன், 26 ஆகஸ்ட், 2021

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)
யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

முன்னுரை:

இந்த உலகத்தில் அறிவாளியாக வேண்டும் என்று பலரும் சொல்வதை நான் கேள்விபட்டிருக்கின்றேன்.சிலர் தாங்கள்தான் பெரும் அறிவாளி என்பதாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.இவற்றிற்கு மத்தியில் ஒரு ஜென் துறவி யார் அறிவாளி என்பதை விளக்குவதை நாமெல்லாம் அறிந்து வைத்திருப்பது நமக்கு மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே அந்த நிகழ்வை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

ஜென் துறவியின் கதை:

"அந்த ஜென் துறவி வில்வித்தையில் மிக கைத்தேர்ந்தவராக இருந்தார்.அவர் மாலை நேரத்தில் ஊரிற்குள் சற்று உலாவிவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.ஒருநாள் வழக்கம்போல் ஊரின் தெருவில் நடந்து கொண்டிருந்த போது சிலர் அவரை பிடித்து வில் வித்தையில் நீங்கள் மிக கைதேர்ந்தவர் என்று கேள்விபட்டோமே.!எங்கே உங்களிடம் வில்லும் இல்லை அம்பும் இல்லையே என்று ஏழனமாக கேள்வி எழுப்பினர் ?

அதற்கு அந்த துறவியோ "செயலின் உச்ச கட்டம் செயலின்மைதான் என்றும், பேச்சின் உச்சகட்டம் மௌனம்தான் என்றும், வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான் என்றும் புன்னகைத்துக்கொண்டே பதிலளித்துவிட்டு அவ்விடத்தைவிட்டும் நகர்ந்து சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வு ஒரு அறிவாளிக்கான உண்மையான இலக்கணத்தை மிகத்தெளிவாக எடுத்துறைக்கக்கூடியதாக இருக்கின்றது.ஓர் செயலின் உச்சநிலை என்பது அதில் செயலற்று இருப்பதுதான் என்பதை ஜென் தத்துவம் எல்லா இடங்களிலும் மிக அதிகமாக வலியுறுத்துவதை நம்மால் காண முடிகின்றது."ஒரு அறிவுள்ள மனிதன் தன்னுடைய அறிவாற்றலை தேவையின்றி பறைசாட்டுவதை விடுத்துவிட்டு அதனை தன்னிடம் பாதுகாப்பாக தக்கவைத்துக்கொள்ளவே நினைப்பான் என்கிறது ஜென் தத்துவம்.

மேலும் பல்ஹீனமானவனே தன்னுடைய ஆற்றலை பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பி இறுதியில் ஆற்றல் அற்றவனாகவே ஆகிவிடுகின்றான் என்பதாகவும் அது மிக வெளிப்படையாக பேசுகின்றது.எனவே அறிவு என்பது அறிவு இன்மையிலிருந்தே பிறக்கின்றது என்பதையும் ஜென் தத்துவம் மிக அற்புதமாக போதிக்கின்றது.யார் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது என்று கூறுவாரோ அவரே அதில் பெரும் ஏமாற்றமும் காண்கிறார் என்பதையும் அது குறிப்பிடுகின்றது.

ஆகவே அண்பர்களே...!

அறிவு என்பது அது பெறப்பட வேண்டியது அதனை நாம் நிரப்பிக் கொண்டோம் என்று நினைத்துவிட்டால் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு எதனையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த பரந்து விரிந்த உலகில் நாம் கற்பதற்கு பல ஆயிரம் கலைகள் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் அவற்றை கற்றுவிட்டோம் என்பதற்காக நாங்கள்தான் பெரும் அறிவாளிகள் என்று பரைசாட்டித்திரியாதீர்கள். அமைதியோடு அதனை அனைவருக்கும் உதவும் விதமாக பிரயோஜனப்படுத்திக்கொண்டே வாருங்கள்.அதுதான் உண்மையான அறிவாளியின் அடையாளமாகவும் இருக்கின்றது.

Previous Post
Next Post