![]() |
அலிபாபாவின் அற்புத உபதேசங்கள். |
1995-ல் நான் என்னுடைய தொழிலை தொடங்கியபோது மிகப்பெரும் கஷ்டத்தில் இருந்தேன்.என் குடியிருப்பில் இருந்த 24 நண்பர்களிடமும் ஏதாவது தொழில் செய்யலாம் என்று அழைத்தேன்.ஆனால் யாருக்கும் அந்த வாய்ப்பு அமையவில்லை.பிறகு அமெரிக்காவிற்கு முதலாவதாக பயணம் செய்தேன். அப்பொழுது வரை நான் கணிணியை தொட்டதுகூட இல்லை.ஏனென்றால் அன்றய தினம் எனக்கு அது மிக விலை உயர்ந்த பொருளாக இருந்தது.ஆனால் சரியாக இரண்டு வருடம் கழித்து அந்த கணிணியில் நான் என்ன செய்ய இருக்கின்றேன் என்பதை விளக்க ஆரம்பித்தேன்.
என் நண்பர்களிடம் என் திட்டத்தை கூறினேன்.அவர்களில் 23 பேர் இது வெல்லாம் உனக்கு சரிபட்டுவராது எனவே இதை மறந்துவிடு என்றார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு கணிணி என்றால் என்னவென்றே தெரியாது, இவர்களிடம் சென்று எப்படி இதை விளக்குவாய் என்றும் கேலி செய்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் ஜாக் நீ எதையாவது புதிதாக முயற்சிக்கின்றாய் என்றால் தாராலமாக முயற்சிசெய்.எதுவானாலும் என்னை அழை நான் வருகின்றேன்.ஆனாலும் எனக்கும் இது தவறாகவேபடுகின்றது என்றார்.
அன்று இரவு முழுவதும் என் திட்டத்தை யோசித்துக்கொண்டே இருந்தேன். நம்மில் பலரும் பல விஷயங்களை செய்யவேண்டும் என்று யோசிப்போம், ஆனால் காலையில் எழுந்த பிறகு நாம் எப்பொழுதும் எந்த வேலைக்கு செல்வோமோ அதே வேலையை தொடர சென்றுவிடுவோம்.ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.என்னுடைய திட்டத்தை நிறைவேற்ற 2000 டாலர்களை என் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் கடனாக பெற்று என் தொழிலை தொடங்கினேன்.அத்தருனம் எனக்கு ஒரு குறுடன் குறுட்டு புலிகளுக்கு முன்னால் ஓடுவதைபோன்று இருந்தது.
அச்சமயத்தில் குதிரையின் மீது சகவாசமாக பயணித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் கீழே விழுந்தார்கள்.நானும் விழுந்தேன்.ஆனால் மீண்டும் எழுந்தேன்.உண்மையில் அத்தோல்வியின் போது நான் மீண்டும் எழும்பவேமாட்டேன் என்றே நினைத்தேன்.ஆனாலும் லட்சியவெறி என்னை புதிய மனிதனாக மீண்டும் பிறக்கச்செய்தது.
பிறகு என் தொழிலை சைனாவின் முக்கிய தொழிலாக பதிய முயற்சித்தேன். அதற்காக நான் அவ்வலுவலகத்திற்கு சென்று என் கம்பெனியின் பெயரை கூறினேன்.அப்பொழுது அவ்வலுவலக அதிகாரி என்னிடம் ஆங்கில அகராதியை கொடுத்துவிட்டு இதில் இன்டர்னெட் என்றொரு வார்த்தையே இல்லை.இதை எப்படி உங்கள் தொழிலின் பெயராக வைக்கப்போகின்றீர்கள் என்றார்.உடனே நான் என் பத்திரிக்கை நன்பரை என் வீட்டிற்கு அழைத்து அவற்றை விளக்கி காணொளி தயாரித்து நிறூபித்ததுதான் என் வாழ் நாளில் மிகக் கடினமான நாளாக இருந்தது.
முதல் மூன்று வருடங்களில் என் தொழிலிள் ஒரு பைசாகூட எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் இன்று என்னுடைய கூட்டாளர்கள் மட்டுமே 60 ஆயிரம் நபர்கள்.மேலும் இன்று என்னுடைய வருமானம் கிட்டதட்ட 550 பில்லியன் டாலர்கள் ஆகும்.நான் பல சமயங்களில் என் குழுவிடம் சொல்வதுண்டு.நாம் ஒரு கம்பெனியல்ல மாறாக நாம்தான் முழு பொருளாதாரமும் என்பேன்.மேலும் 2036 -ல் நாங்கள்தான் உலகின் 5 வது பணக்காரர்களாக இருப்போம் என்றும் நான் நம்புகின்றேன்.
அன்றே என் நண்பர்களிடம் நான் கூறினேன் "இந்த உலகின் பத்து பணக்காரர்களில் நானும் ஒருவனாக வருவேன் என்று..!இன்று நான் அதனை செய்துவிட்டேன்.ஆகவே இன்று நீங்கள் கஷ்டப்படுகின்றீர்கள் என்பதற்காக வருந்தாதீர்கள்.முதலில் நூறு மீட்டர் ஓட கற்றுக்கொள்ளுங்கள்.பிறகு படிப்படியாக உயர முயலுங்கள்.யாரையும் உங்களுடைய போட்டியாளராக கருதாதீர்கள்.உங்கள் பாதையை நோக்கி நீங்கள் நடந்துகொண்டே இருங்கள்.
இங்கு ஓய்வு என்பது மிக எளிதில் கிடைத்துவிடாது என்பதை மறந்து விடாதீர்கள்.ஏனென்றால் நான் என் நாற்பது வயதிலேயே ஓய்வெடுக்க முடிவெடுத்தேன்!முடியவில்லை.பிறகு நாற்பத்தி ஐந்தாம் வயதில் முயற்சித்தேன்!முடியவில்லை.என் நண்பர்கள் நான் பில்கேட்சை தோற்கடிக்க முயற்சிக்கின்றேன் என்று நினைத்தார்கள்.உண்மை என்னவெனில் பில்கேட்சை என்னால் போட்டியாளராககூட பார்க்க முடியாது.ஏனெனில் அவர்தான் உலகிலேயே மிக விரைவாக ஓய்வு பெற்றவர் என்றாலும் நிச்சயமாக "நான் என் அலுவலகத்திலேயே இறக்கமாட்டேன்.மாறாக கற்பிக்கும் ஆசிரியனாக ஏதாவதொரு கடற்கரையின் ஓரமே நான் இறப்பேன்.
ஏனென்றால் சாஃட்வேர் என்றால் என்ன என்பதையும் அது என்ன செய்யும் என்பதையும் நான் நன்றாக அறிவேன்.நான் என் மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியனாக இருந்து விட்டு செல்வேன்.அன்பர்களே இறுதியாக ஒன்றை கூறிக்கொள்கின்றேன்.இன்று உங்களை நீங்கள் ஒரு முதலாளியாக நினைத்து செயல்பட்டால் கட்டாயம் அது ஒரு ஐந்து வருடம் தொடரலாம்.ஆனால் அதுவே உங்களை நிங்கள் ஒரு நல்ல உழைப்பாளியாக எண்ணி செயல்பட்டால் இன்று கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
அவ்வளவு ஏன் நாளை அதை விட கடினமாககூட இருக்கலாம்.ஆனால் நாளை மறு நாள் என்பது நிச்சயம் இன்பகரமானதாக அமையும்.ஆனாலும் நம்மில் பலரும் அடுத்த நாளின் இரவிலேயே இறந்து போய்விடுகின்றோம் என்பது கைசேதத்துக்குறியதாகும்.எனவே கடுமையாக உழையுங்கள்,நன்கு கற்றுக் கொள்ளுங்கள்,உங்கள் குழுவிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து விட்டு செல்லுங்கள்.!