![]() |
உலக நாடுகளும் ஆட்சி முறைகளும். |
பிளேட்டோவின் ஆறு ஆட்சி முறைகள்:
கிரேக்க நாகரீகத்தின் தந்தையாக போற்றப்படும் பிளேட்டோ இந்த உலகில் மக்களை ஆட்சி செய்வதற்கு ஆறு வழிகள் இருப்பதாக தன்னுடைய (ரிபப்ளிக்)குடியரசு என்ற புத்தகத்தில் வரையறுத்துக்கூறியுள்ளார்.அவற்றை முதலில் நாம் அறிந்து கொண்டால் அரசியல் ஆட்சி சம்மந்தமான சரியான புரிந்துணர்வை நமக்கு ஏற்படுத்த அது மிக உதவியாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவற்றை முதலில் இங்கு நான் குறிப்பிட்டுவிடுகின்றேன்.
1.ஒருவர் மட்டும் ஆட்சி செய்வது.
2.அறிஞர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.
3.செல்வந்தர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.
4.இரானுவ வீரர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.
5.சட்டங்களை தொகுத்து அதன்படி குறிப்பிட்ட ஒரு சாரார்கள் ஆட்சி செய்வது.
6.மக்களே தன் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களே ஆட்சி செய்வது.
இந்த ஆறு வழிமுறைகளில் மட்டுமே ஒரு நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாகவே பிளாட்டோ வரையறுத்து சென்றிருப்பது அறிவு உலகில் மிகப்பெரும் சாதனையாக போற்றப்படுகின்றது.ஏனெனில் இந்த ஆறு முறைகளில்தான் இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யப்பட்டும்வருகின்றது.இந்த ஆறு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் பிளேட்டோ இவற்றில் ஆறாவது வழிமுறையே மக்களுக்கு சிறந்தது என்றும் அதற்குத்தான் முறையான குடியரசு ஆட்சி என்றும் அவர் பெயரிடுகின்றார்.மேலும் இந்த ஆட்சியானது முற்றிலும் நீதி என்ற ஒற்றை வார்த்தைக்குள்ளே அடங்கி இருக்கவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.
இந்த குடியரசை நிலைநாட்டவே முதலாம் உலகப்போர் தொடர்ந்து பல்வேறு யுத்தங்கள் நடைபெற்றதாகவும் சில வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு விவரிக்கின்றன.பின்வரும் கட்டுரைகளில் குடியரசு என்பதைப்பற்றியும் மக்களாட்சி பற்றியும் விவரிக்கின்றேன்.இப்பொழுது இந்த கட்டுரையில் மன்னராட்சி என்றால் என்ன ?என்பது சம்மந்தமாகவும் அது எப்படி கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது சம்மந்தமாகவும் மேலும் அது இன்று எவ்வாறு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாகவும் விவரிக்கின்றேன்.
மன்னராட்சி என்பது என்ன.?
ஆரம்ப காலகட்டங்களில் மன்னர் ஆட்சியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்ததாக நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனை தமிழில் முடியாட்சி என்று அழைத்து வந்துள்ளனர்.இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான மொனார்சி(monarchy)என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.இந்த முடியாட்சி என்பது ஒரு நபரிடமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து கொடுத்துவிட்டு மக்களுக்கும் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை கடைபிடிக்கச் செய்யும் ஒரு முறையாகவே கடைபிடிக்கப்படுவதாகும்.இவற்றில் அரசரின் வாரிசு மட்டுமே அரசராக முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
மேலும் அவ்வரசர் தானாக இறக்கும் வரையிலும் அல்லது தானாகவே எனக்கு இந்த மன்னர் பதவி வேண்டாம் என்று விலகும் வரையிலும் அவரே பதவியில் இருப்பார் என்பது மன்னராட்சியில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. மேலும் ஒரு நாட்டின் அரசன் எவ்வித சட்டதிட்டதிற்கும் உட்படாத ஒருவனாகவே பார்க்கப்பட்டுவந்தான்.இதனால் பெரும்பாலான நாடுகளில் அரசனே அம்மக்களால் கடவுளாக வணங்கப்பட்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இன்றைக்கும் சீனா ஜப்பான் நேப்பால் போன்ற நாடுகளில் அவர்களின் அரசரையே அவர்கள் கடவுளாக வணங்கி வருவது இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
இன்றைக்கும் மன்னராட்சி கடைபிடிக்கப்படுகின்றதா.?
21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும் கிட்ட தட்ட 47 நாடுகளில் மன்னர் ஆட்சியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அவற்றில் குறிப்பிட தக்க சில நாட்டின் பெயர்களை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.
ஜப்பான்,மலேசியா,சுவேசர்லாந்து,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மொராக்கோ போன்ற பெரும் நாடுகளில் இன்று வரை மன்னராட்சியே நடைபெற்று வருகின்றது.
மன்னராட்சியின் விளைவுகள் என்ன?
1.மேலே நான் குறிப்பிட்டதுபோல் மன்னராட்சி என்பது மக்களை முற்றிலுமாக அரசு அதிகாரத்திற்குள் விடாத அரசுமுறையாக இருக்கின்றது என்பதால் மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகள் இதனை முற்றிலும் எதிர்த்தன. இதற்காக பல யுத்தங்களும் நடத்தப்பட்டே இன்று மக்களின் குடியாட்சி அல்லது மக்களாட்சி என்பது தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.
2.சர்வாதிகாரத்திற்கான முழு வாய்ப்பும் இந்த மன்னராட்சியில் இருப்பதாலும் முந்தய கால மக்கள் அவ்வாறு அடக்கி ஆளப்பட்டதாலும் இந்த மன்னராட்சியை இன்றைய மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.
3.ஒரே நபரிடம் அதிகாரம் முழுவதையும் இந்த மன்னராட்சிமுறை கொடுத்துவிடுவதால் அவரின் தனிப்பட்ட முடிவுகளால் ஒட்டு மொத்த மக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கவேண்டிய சூழழுக்கு தள்ளப்படுகின்றனர்.இதனாலேயே முந்தைய ஐரோப்ப நாடுகளில் பல சமயங்களில் மிகப்பெரும் புரட்சிகள் வெடித்தாகவும் நம்மால் காண முடிகின்றது.
தொடர்ந்து பார்ப்போம்..!