![]() |
எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது |
முன்னுரை:
என்னிடம் அதிகமானோர் கேட்கும் கேள்வி "பணத்தை எப்படி வீணாக செலவழிக்காமல் பாதுகாப்பது என்பது பற்றித்தான்..!எனவே அது சம்மந்தமாக சுறுக்கமாகவும்,அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும் அளவிற்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வடிவமைத்தேன்.இது உங்கள் அனைவருக்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.அனைவரும் படித்து பிரயோஜனம் அடைவதோடு உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தும் பிரயோஜனம் பெறச்செய்யுங்கள்..!
எதெற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது?
1.மலிவான பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் செலவழிக்காதீர்கள்.அதாவது மிக மட்டமான ஒரு பொருள் மிக மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக மட்டும் வாங்காதீர்கள்.அது உங்களுடைய பணத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.
2.நோயை தரும் பொருட்களை வாங்கி உண்ணுவதற்காக உங்கள் பணத்தை செலவழிக்காதீர்கள்.உதாரணமாக போதை தரும் மது,கஞ்சா,பான் பாக்குகள், மேலும் சிகரெட்கள் போன்றவற்றிற்காக உங்கள் பணத்தை ஒருபோதும் வீணடிக்காதீர்கள்.இவைகள் அனைத்தும் உங்கள் பணத்தையும் அழித்து உங்கள் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் நிச்சயம் இழக்கச்செய்துவிடும். எனவே எவையெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு தீங்குதரும் என்று எண்ணுவீர்களோ அப்பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் வீணடிக்காதீர்கள்.
3.மக்களுக்கு நீங்கள் மிகப்பெரும் பணக்காரர் என்று காட்டுவதற்காக மட்டும் கவர்ச்சிமிக்க பொருளை வாங்கிவைத்துக்கொள்வதில் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.அதாவது விலை உயர்ந்த ஒரு பொருளை மக்களிடம் காட்டுவதற்காக மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.அதனால் உங்களுக்கு நலவை விட தீங்கே வந்தடையலாம்.மேலும் அப்பொருளை நீங்கள் பேணிப்பாதுகாக்கவும் தேவையிருக்கும்.எனவே உங்களுக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை மட்டும் உங்கள் மனதிற்கு பிடித்தவாறு வாங்கிக்கொள்ள முயற்சிசெய்யுங்கள்.வெறும் கவர்ச்சிக்காக மட்டும் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.
4.உங்களுக்கு எது புரியவில்லையோ அதில் உங்கள் பணத்தை ஒருபொழுதும் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக ஜோசியம்,குறி சொல்லல்,மாயம்,மந்திரம் என்ற மறைவான விஷயங்களுக்காக உங்களுடைய பணத்தை ஒருபோதும் செலவழிக்காதீர்கள்.ஏனெனில் இவைகள் பெரும்பாலும் ஏமாற்றுவதற்கும் பித்தலாட்டங்கள் செய்வதற்குமே பயன்படுகின்றன.எனவே உங்களுடைய பணத்தை இது போன்ற விஷயங்களில் வீணடித்துவிடாதீர்கள்.
5.உங்களுக்கு தெறியாத வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.உதாரணமாக பங்குச்சந்தையில் எந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவது எப்படி வாங்குவது பிறகு அதனை எப்படி கையாள்வது என்ற எந்த அடிப்படை அறிவுமில்லாமல் அதில் உங்கள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்.அது உங்களுடைய பணத்தை புள்ளுக்கு இறைத்த நீராக ஆக்கிவிடும்.
6.தேவையற்ற (பெட் ) பந்தயம்கட்டாதீர்கள்.உதாரணமாக கிரிக்கெட்டில் இந்த அணிதான் வெள்ளும் என்றோ அல்லது இந்த அணி தோற்கும் என்றோ பந்தையம்கட்டாதீர்கள்.இதுவும் உங்களுடைய பணத்தை தேவையில்லாமல் வீணடிப்பதற்கே பயன்படக்கூடியதாகும்.
7.சூது,தாயம் போன்ற விளையாட்டுக்களில் உங்கள் உழைப்பை ஒருபொழுதும் வீணடித்துவிடாதீர்கள்.அவற்றைவிட உங்கள் வருமானத்தை விணடிக்கும் ஒரு செயல் வேறொன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.
8.உங்கள் புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ அவசியமின்றி சமூகவளைதளங்களில் பணம் கொடுத்து பதிவேற்றம் செய்யாதீர்கள்.அதனை விளம்பரப்படுத்துவதற்கும் உங்களுடைய பணத்தை முடிந்தளவு செலவழிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் பெரும்பாலும் சமூகவளைதளங்கள் என்பது நிஜமற்றதாகவே இருக்கின்றது. எனவே முடிந்தளவு உங்கள் பணத்தை அவற்றில் செலவழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
9.பொழுது போக்கு காட்சிகளுக்காக உங்களுடைய பணத்தை அதிகம் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக அதிக பணம் கொடுத்து அடிக்கடி திரையரங்குகளுக்கு செல்வது,அல்லது அதிக பணம் கொடுத்து ப்ரீமியம்(premium) காணொளிகளை பெறுவது போன்ற விஷயங்களை பெறும்பாலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.இவற்றில் உங்களுடைய பணம் வீணாவதைவிட்டும் முடிந்தளவு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
10.உங்கள் வருமானத்தில் 20 % மேல் செலவை தரும் வீடுகளை வாடகைக்கு எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.அதாவது உங்களுக்கு போதுமான அறைகளை கொண்ட ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.தேவையின்றி அதிகமான அறைகளை கொண்ட மிக விலை உயர்ந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வீணடித்துவிடாதீர்கள்.
11.அருகில் சென்று வருவதற்கெல்லாம் அடிக்கடி வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.இதனால் பெட்ரோல்,மற்றும் டீசலும் வீணாகும் உங்கள் ஆரோக்கியமும் வீணாகும்.எனவே முடிந்தளவு அருகில் நடந்தே சென்றுவிடும் இடங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள். அவற்றிற்கு மாற்றாக சைக்கிள்களையும் பயன்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
மேற்கூறிய இந்த 11 விஷயங்களையும் உங்களால் முடிந்தளவு கடைபிடித்து வாருங்கள்.இதனால் நிச்சயம் உங்கள் பணம் உங்களுடைய கட்டுக் கோப்பில் இருக்கும்.
எழுத்தாளார்:
Dr.S.Dhana Priya