![]() |
எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk) |
உங்களுக்குத் தெரியுமா என்னுடைய கார் உற்பத்தி தொழிற்சாலைதான் நான் என்னுடைய அதிகமான நேரத்தை செலவிட்ட இடமாகும்.மேலும் நான் தூங்கும் இடமும் அதுதான்.அங்கு ஒரு மூலையில் சாய்ந்தவாரே நான் தூங்கிய சமயத்தை விட மிக வலிநிறைந்த சமயம் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.பெரும்பாலும் என் வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பே அற்றுப்போனேன்.உண்மையில் நான் வெற்றிக்காக போராடியது என்பது என்னுடைய கால்முறிந்துபோனதை விட கொடுமையானதாகவே நான் கருதுகின்றேன்.இப்பொழுது நான் வெற்றி பெற்றவனா இல்லையா என்று நான் அறியமாட்டேன்.ஆனால் எல்லா வெற்றியாளர்களும் ஆரம்பத்தில் மிகப்பெரும் தோல்வியாளர்களே என்பதை நான் மறுக்கமாட்டேன்.
உண்மையான வெற்றியாளர்கள் தங்களின் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு எழுந்து வந்துவிடுகின்றார்கள்.ஆனால் தோல்வியாளர்களோ தன் தவறுகளை தட்டிக்கழித்துவிட்டு ஆணவத்தோடு தோற்றுப்போகின்றார்கள். நான் இயற்பியலை நன்றாக படித்ததால் ஒரு தவறிலிருந்து எப்படி திரும்பி வரவேண்டும் என்பதை நன்றாக அறிவேன்.இயற்பியல் எனக்கு கற்பித்த முதல் விஷயம் "இந்த உலகில் சரி, தவறு என்பதெல்லாம் கிடையாது" என்பதுதான். மேலும் அனுபவங்களே இந்த உலகம் என்பதை நான் நன்றாக அறிவேன். எனவே அதுவே எனக்கு போதும்.
தோல்வி என்ற வார்த்தையை நான் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. ஏனென்றால் தவறுகள் என்பதே அடுத்த கட்டத்திற்கான முதல் படி என்றே நான் நம்புகின்றேன்.அதை சீர் செய்து விட்டு செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கின்றது.எனவே புதிதாக ஒன்றை நீங்கள் செய்ய துணிந்தால் தாராலமாக தவறு செய்யுங்கள்.பிறகு அதனை விரைந்து சீர் செய்துவிடுங்கள். உண்மையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது தவறே இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் கிடைத்துவிடாது.மாறாக நடைபெறும் தவறை விரைவாக சீர் செய்வதின் மூலமே ஒரு நிறுவனம் வெற்றியடைகின்றது.
என்னுடைய நிறுவனத்தில் புதிதாக செயல்படும் நபர்களையே இணைத்துக் கொள்கின்றேன்.ஆதலால் எங்கள் உற்பத்தி மிக புதுமை நிறைந்ததாக இருக்கின்றது.மேலும் தரமானதாகவும் இருக்கின்றது.எங்களுடைய காரிற்கு நாங்கள் விளம்பரம் ஏதும் கொடுப்பதில்லை அதன் தொகையை தரத்திற்காக செலவழிக்கின்றோம்.ஆகையால் இன்று எங்கள் உற்பத்திகள் அதிக அளவில் விற்பனையாகின்றது.எனவே புதிதாக எதையேனும் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தைரியமாக செய்யுங்கள்.என் நிறுவனம் 2008 -ல் தோல்வியுற்றுவிட்டது என்று மக்களில் சிலர் பரப்பி சந்தோஷமடைந்தார்கள். அதனால் கிறிஸ்மஸ்சை கூட நான் சந்தோஷமாக கொண்டாடவில்லை.
உண்மையில் அந்த மக்கள் நான் என்ன செய்கின்றேன் என்றும்,என் திட்டத்தின் நோக்கம் என்ன என்றும் கூட தெறியாமலே என்னை அவர்கள் விமர்சித்தார்கள்.அதனால் நான் மிகப்பெரும் வேதணை அடைந்தேன்.ஆனால் இன்று நான் என் இலட்சியத்தை அடைந்துவிட்டேன் என்றே நினைக்கின்றேன்.ஆகவே என் வாலிப நண்பர்களே ..!உங்கள் இளமையை பார்த்து நான் பொறாமைபடுகின்றேன்.ஏனென்றால் அது மிக விலைமதிக்க முடியாதது.
எது எப்படியோ நீங்கள் படியுங்கள்,அல்லது வேலை செய்யுங்கள் அது உங்களுடைய விருப்பம்.ஆனால் ஏதேனும் ஒரு இலட்சியத்தோடு அதனை செய்யுங்கள்.நன்றாக நினைவில் கொள்ளுங்கள் பணம் அதனை எங்கிருந்தாலும் சம்பாரித்துவிடலாம்,ஆனால் இலட்சியம் என்பது அவ்வாறல்ல.இங்கு அதிகமானோர் தோற்பதை பயப்படுகின்றார்கள்.அந்த பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.எங்கு தோல்வியும் ,கடினமும் இல்லையோ அங்கு ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.