வியாழன், 19 ஆகஸ்ட், 2021

யார் இந்த சாக்ரடீஸ்?(Socrates)

யார் இந்த சாக்ரடீஸ்
யார் இந்த சாக்ரடீஸ்

முன்னுரை:

சாக்ரடீஸ் அறிவியல் உலகில் அரிஸ்டாட்டிலை காட்டிலும் மிக பிரபல்யமான ஒரு நபராக கருதபடுகின்றார்.ஏனெனில் சாக்ரடிஸின் மாணவர் பிளேட்டோவின் மாணவர்தான் அரிஸ்டாட்டில் ஆவார்.ஆகவே இயற்பியலின் தந்தையாக அரிஸ்டாட்டில் போற்றப்பட்டாலும் அவருக்கெல்லாம் ஆசானாக திகழ்ந்த சாக்ரடீசே கிரேக்க நாகரீகத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.

இவர் தன்னுடைய வாழ்வில் எந்த புத்தகத்தையும் தொகுத்துக் கொடுக்கவில்லை என்பதால் இவருடைய மாணவர்களாளே இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.இவருடைய மாணவர் பிலேட்டோ (Great dialogue of plato)என்ற புத்தகத்தில் தன் ஆசிரியரின் பெருமைகள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கின்றார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்..!

சாக்ரடீஸ் என்பவர் ஆரம்ப காலத்தில் படைவீரராக இருந்துவந்தார் .
பிறகு வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்ளும் வேட்கையோடும் தன் நாட்டு இளைஞர்களை நல்முறைபடுத்தும் எண்ணத்திலும் அப்படையிலிருந்து விலகி தத்துவவியலை உறுவாக்கத்தொடங்கினார்.அதில் தேர்ச்சியும் பெற்றார்.
பிறகு அதனை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக முழு பிரச்சாரகராகவும் பணியாற்றத்தொடங்கினார்.இந்த உலகில் ஒவ்வொரு பொருளையும் பார்த்து ஏன்?எதற்கு?எப்படி?என்ற கேள்வியை ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டும் என்று போதித்தார்.கேள்வி கேட்பதற்கென்றே ஒரு தனி சபையையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்.

அங்கு வாலிபர்களின் கூட்டம் அலைமோதும் அளவிற்கு அவருடைய கேள்வியும் பதிலும் அமைந்திருக்கும்.இவருடைய பகுத்தறிவை கண்ட அத்துனை வாலிபர்களும் இவருக்கு உற்ற சீடர்களாக தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் தான் பிலேட்டோவும்.இன்னும் சொல்லப்போனால் இவருடைய அறிவு ஞானத்தை கண்ட ஒரு பெண் தானே முன்வந்து தன்னை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டதால் அவளையே சாக்ரடீஸ் திருமணம் முடித்துக் கொண்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.

ஆக அவருடைய அறிவாற்றலை போற்றும் மக்கள் ஒரு புறம் தோன்றினாலும் அந்த ஊரில் இருந்த செல்வந்தர்களுக்கும் ஆட்சியாளர்களில் சிலருக்கும் அவரை பிடிக்கவில்லை.அவருடைய அந்த போதனையை விட்டுவிட வேண்டும் என்று சாக்ரடீஸிற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.ஆனால் அதனை மறுத்துவிட்ட சாக்ரடீஸ் அவருடைய பிரச்சார்த்தை தொரர்ந்து செய்து வந்தார்.ஒரு கட்டத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செல்வந்தர்கள் அவரை கைதும்செய்தனர்.

அதாவது இளைஞர்களை கெடுப்பதாகவும்,பகுத்தறிவு என்ற பெயரில் தங்களின் கடவுள்களை அவமதிப்பதாகவும் சில ஊர் பெரியவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.வழக்கு பஞ்சாயத்தில் வைக்கப்பட்டது.அப்பொழுதும் சாக்ரடீஸிடம் நீங்கள் உங்கள் பிரச்சாரத்தை விட்டுவிடுங்கள்,அப்படி விட்டுவிட்டால் உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் சாக்ரடீஸ் தான் மக்களின் அறியாமையை போக்கவே பாடுபடுகின்றேன் என்றும் அது என்னுடைய பார்வையில் குற்றமல்ல என்றும் கூறி நான் இதை ஒருபோதும் விடப்போவதில்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

பிறகு கோபமடைந்த மக்களோ அவருக்கு மரண தண்டனையை விதித்தார்கள்.இறுதியில் அவருக்கு விஷம் கொடுத்து கொல்லவும்பட்டார் என்றே வரலாறு முடிகின்றது.சாக்ரடீஸின் வாழ்வில் நாம் படிப்பினை பெற மிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய வாழ்வை சுறுக்கமாக பதிவிட்டுள்ளேன்.அவர் இந்த உலகிற்கு சொல்ல வந்த முதல் விஷயம் அறிவு என்பது சுதந்திரமாக சிந்திப்பதில் தொடங்குவதுதான் என்பதேயாகும்.

அதாவது நாமே ஒன்றை நிர்னயித்து வைத்துக்கொண்டு அதைப்பற்றி எந்த கேள்வியும் எழுப்பக்கூடாது என்றோ அல்லது அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என்றோ அறிவை அடக்கி வைத்துவிடக்கூடாது என்பதை ஆழமாக அவர் தன் வாழ்வில் உணர்த்திவிட்டு சென்றுள்ளார்.இன்றைய உலகில் அதிகமான பெற்றோர்களும்,ஆசிரியர்களும் இந்த தவறை செய்வதை நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.அதாவது ஒரு குழந்தை கேள்வி எழுப்பினால் உடனே அதனைப்பார்த்து மக்கு உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா?என்று மட்டம் தட்டி அமர்த்திவிடவே முயற்சிக்கின்றோம்.

ஆனால் சாக்ரடீஸ் யார் கேள்வி எழுப்பமாட்டானோ அவன்தான் மிகப்பெரும் முட்டால் என்று விவரிக்கின்றார்.மேலும் அவன் ஒரு கோழை என்பதாகவும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆக அறிவு என்பது கேள்வியிலிருந்து பிறப்பதுதான். எனவே அனைவரையும் கேட்கவிடுங்கள் என்றே அவர் வலியுறுத்துகின்றார். மேலும்  மூடநம்பிக்கைகளை ஒழிக்க அதுவே தீர்வாக அமையும் என்பதையும் அவர் ஆழமாக நம்புகின்றார்.எனவே அண்பர்களே..!

உங்கள் குழந்தைகளோ அல்லது பணியாட்களோ அனைவரையும் கேள்வி எழுப்பவிடுங்கள்.உங்கள் கோபத்தாலோ அல்லது எறிச்சலாலோ அதனை தடுக்க முயற்சிக்காதீர்கள்.ஏனெனில் அங்கிருந்துதான் நல்அறிவும் நல்ல புரிந்துணர்வும்  ஆரம்பமாகின்றது.என்னைப்பார்த்து நீயெல்லாம் கேள்வி கேட்பதா?என்ற ஆணவத்தால் அறிவுக்கதவுகளை தயவுசெய்து அடைத்து விடாதீர்கள்..!அறிவே நலவு என்ற சாகரடீஸின் கருத்துக்கு ஒப்ப நம் வாழ்வையும் அமைத்து அற்புதமான ஒரு சமூகம் படைப்போமாக...
Previous Post
Next Post