புதன், 18 ஆகஸ்ட், 2021

நீங்களும் வெற்றியாளராகலாம்.(success)

நீங்களும் வெற்றியாளராகலாம்.
நீங்களும் வெற்றியாளராகலாம்.

முன்னுரை:

இந்த உலகில் நீங்களும் ஒரு வெற்றியாளராக வேண்டும் என்ற ஆசையிருக்கின்றதா?அல்லது இந்த உலகில் நீங்களும் தனித்துவமிக்க ஒரு நபராக வேண்டும் என்ற வேட்கை இருக்கின்றதா?அப்படியானால் கீழே நான் குறிப்பிடும் சில அடிப்படையான விஷயங்களை கடைபிடியுங்கள்.நிச்சயம் நீங்களும் வெற்றியாளராகலாம்.


வெற்றியாளராவதற்கான வழிகள்:

1.முதலாவதாக நீங்கள் எத்துறையில் வெற்றிபெற நினைக்கின்றீர்களோ அத்துறையை முழுமையாக ஏற்கும்படி உங்கள் ஆழ்மனதிற்கு பயிற்சி அளியுங்கள்.ஏனென்றால் உங்கள் ஆழ்மனது ஒன்றை ஏற்றுவிட்டால் இந்த உலகில் யாராலும் அதனை தடுத்துவிட முடியாது என்பதே மனோ தத்துவம் கூறும் மகத்தான உண்மையாகும்.

மேலும் மேலோட்டமான எண்ணம் கொண்ட ஒருவரால் ஒரு காரியத்தை எப்பொழுதும் சீராக செய்துவிட முடியாது என்பதே நிதர்சனமுமாகும்.எனவே நீங்கள் வெற்றி பெறத்துடிக்கும் அச்செயலை அளவுகடந்து நேசியுங்கள்.
அதனைப்பற்றியே பெரும்பாலும் சிந்தியுங்கள்.அது சம்மந்தமாகவே அதிகம் பேசுங்கள்..!இவ்வாறு நீங்கள் செய்துவந்தால் நிச்சயம் உங்கள் ஆழ்மனம் அவற்றிற்கு அடிமையாகிவிடும்.பிறகு நீங்கள் அதனைவிட்டும் தூரமானாலும் அது உங்களைவிடாமல் துரத்திப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

ஆக ஒரு வெற்றியாளனுக்கு வெற்றி காண பெறப்படவேண்டிய முக்கிய அம்சம் அதனை ஆழ்மனதால் நேசிப்பதுதான்.யாரிடம் அது இல்லையோ நிச்சயம் அவரால் வற்றியை அடைந்துகொள்ளமுடியாது என்பது எனது நம்பிக்கையாகும்.ஏனென்றால் மனிதன் எதனை தன் மனதால் விரும்பமாட்டானோ அதனை என்றைக்கும் பெற்றுக் கொள்ளவேமாட்டான் என்பது எழுதப்படாத விதியாகும்.ஒருவேளை அதனை பெற்றாலும் நிச்சயம் குறுகிய காலத்திலேயே அதனை இழந்துவிடுவான் எனபதே நிதர்சனமுமாகும்.

எனவே அண்பர்களே..!நீங்கள் வெற்றி காணவேண்டும் என்று துடிப்பதை அளவு கடந்து நேசியுங்கள்..!அவ்வாறு இல்லையெனில் முடிந்தளவு உங்கள் மனம் ஏற்காததை உங்கள் வெற்றிக்கான ஒன்றாக தேர்ந்தெடுத்துக் கொள்ளாதீர்கள்..!

2.இரண்டாவதாக நீங்கள் எத்துறையில் வெற்றிகாண விரும்புகின்றீர்களோ அத்துறையின் மீதே உங்கள் முழு கவணத்தையும் செலுத்துங்கள்.அதாவது நீங்கள் நேசிப்பது ஒன்றாக இருக்க வேறொன்றின் மீது உங்கள் கவனத்தை ஒரு காலமும் செலுத்தாதீர்கள்.ஏனென்றால் நீங்கள் எதில் வெற்றியைடைய துடிக்கின்றீர்களோ அதில் நீங்கள் கவனம் செலுத்த தவறினால் நிச்சயம் உங்களால் அதனை அடைந்து கொள்ளவே முடியாது என்பது எனது கண்ணோட்டமாகும்.

இன்றைக்கு பலரும் தான் ஒரு வெற்றியாளராக வேண்டும் என்ற சில கனவுகளோடுதான் வாழ்கின்றனர் என்றாலும் தன் கனவிற்கான பாதையில் அவர்கள் சிறிது கூட கவனம் செலுத்துவதில்லை என்பதே அவர்களின் கனவு நிறைவேறாததற்கு காரணமாகிவிடுகின்றது என்றே நான் கூறுவேன். பெரும்பாலானோர் தங்கள் கனவுகள் கலைந்து போவதற்கு காரணமாக சொல்வது வாழ்வாதாரத்தை தேடவேண்டியுள்ளது என்பதும்,தனக்கான குடும்ப பொறுப்பு இருக்கின்றது என்பதும்தான்.

ஆனால் என்னைப்பொறுத்தமட்டில் ஒரு வெற்றியாளனுக்கு தன் கனவுகளை நிஜமாக்க அடிப்படை தேவை அவனுடைய பொன்னான நேரம் மட்டுமே. அதனை அவன் தன் குடும்பத்துடனோ அல்லது அவற்றை தவிர்த்துவிட்டோ அடைந்து கொள்வதற்கு அவனே முடிவு செய்ய வேண்டும்.ஏனெனில் இந்த உலகில் தனித்துநின்று தன் கனவை அடைந்தவர்களுமுன்டு,தன் சுற்றத்தார்களோடே வெற்றி பெற்றவர்களும் உண்டு.இங்கு நாம் எந்தளவிற்கு நாம் நேசிக்கும் கனவின் மீது கவனம் செலுத்துகின்றோம் என்பதை பொறுத்தே நாம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும்.

ஆக நீங்கள் ஒரு நல்ல வெற்றியாளனாக வேண்டுமானால் நீங்கள் நேசிக்கும் கனவை பின் தொடர்ந்துகொண்டே இருங்கள்.அதன் மீது அதீத கவனம் செலுத்திக்கொண்டே இருங்கள். நிச்சயம் உங்கள் வெற்றிக்கான இலக்கை மிக அருகில் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

3.மூன்றாவதாக நீங்கள் வெற்றி காணத்துடிக்கும் அவற்றை அடைவதற்கான திட்டங்களை முறைப்படுத்துங்கள்.ஏனெனில் திட்டமில்லாத ஒரு கனவு நிச்சயம் காணல் நீரிற்கு ஒப்பானதாகவே பார்க்கப்படும்.விலை உயர்ந்த வாகனமும் அற்புதமான சாலையும் இருக்கும் பொழுது அவற்றில் எவ்வழியாக பயணிக்கப்போகின்றோம் என்பதை நாம் நிர்னயம் செய்யவில்லையெனில் அடர்ந்த காடுகளிலோ அல்லது பாதையே இல்லாத புதர்களிலோ சிக்கிவிடும் வாய்ப்பு நமக்கு அதிகம் இருக்கின்றது.எனவே உங்கள் கனவிற்கான பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும்,எவ்வழியாக இருக்க வேண்டும் என்பதையும் முன்பே திட்டமிடுவது என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

திட்டமில்லாத கனவுகள் என்பது வெற்று ஆசையே என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வெற்றியை அடைவதற்கான ஒரு திட்டத்தை அமைத்து அதில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் பயணித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை அவ்வப்பொழுது அளவிட்டுக் கொண்டே வாருங்கள்.இவ்வாறு நீங்கள் செய்துவந்தால் நிச்சயம் உங்கள் வெற்றிக்கான முதல் படியில் ஏறிவிட்டீர்கள் என்பதே பொருளாகும்.

4.நான்காவதாக உங்கள் வெற்றிக்கான பாதையில் கடிணமாக உழையுங்கள். அதனை அடைவதற்கான பாதைகள் என்னவெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தையும் அமல்படுத்துங்கள்.அதில் வரும் துன்பங்களையும், இன்னல்களையும் சகித்துக்கொள்ளுங்கள்,நஷ்டங்களையும்,இழப்புகளையும் சீர் செய்யுங்கள்,இவ்வாறு செய்து கொண்டே வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வில் என்றேனும் ஒரு நாள் நீங்கள் கன்ட கனவு நிஜமாகிவிடும்.உங்கள் வெற்றிக்கான கனி உங்கள் கையில் தவளும்..! 

அன்பர்களே..!மேற்கூறிய இந்த நான்கு விஷயங்களையும் கடைபிடித்து வாருங்கள்.நீங்கள் எதில் வெற்றி காண நினைக்கின்றீர்களோ அவற்றில் நிச்சயம் வெற்றி காணமுடியும் என்றே நான் நம்புகின்றேன்.இலக்கை அடைவோம்..!வெற்றி காண்போம்..!
Previous Post
Next Post