அவன் பல ஆயிரமுறை மலுங்கிய கோடாரியால் மரத்தை வெட்டினாலும் அவனால் அதனை சரிவர வெட்டிவிட முடியாது.ஆனால் அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு சிறிது நேரம் அவன் கொடுத்தால் அவனுடைய வேலை மிக துரிதமாகவும் அவன் விரும்பியவாரும் நடந்தேறிவிடும்.அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு தனக்கு நேரமில்லை என்றோ அல்லது சோம்பேரித் தனமாகவோ அவன் இருந்துவிட்டால் அம்மரத்தை வெட்டுவதிலேயே தன் வாழ்வின் பெரும்பங்கை அவன் செலவளிக்க நேரிடும்.மேலும் அதனால் அவனுடைய ஆற்றலும் வீணடிக்கப்படும் என்பதே உண்மையாகும்.
இந்த உலகத்தில் பலகோடி மக்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே வெற்றியாளர்கள் ஆகின்றனர்.ஏனென்றால் அவர்கள் மட்டுமே தங்கள் மீது முதலீடு செய்கின்றனர்.தங்களின் பொன்னான நேரத்தை தங்களின் அறிவையும்,திறமையையும்,அனுபவங்களையும் திறம்பட ஆக்கிக் கொள்வதற்காகவே செலவழிக்கின்றனர்.வெற்றியாளர்கள் என்றும் மலுங்கிப்போன கோடாரியால் மரம் வெட்டமுயலுவதில்லை.அவர்கள் தங்கள் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.அதிகம் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
மேலும் அக்காரியம் குறித்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். அதிகம் பொறுமையோடு முயல்கின்றார்கள்.இறுதியில் அதில் வெற்றியும் காண்கிறார்கள்.ஆகவே நீங்களும் வெற்றியாளராக ஆசித்தால்"கற்றுக் கொள்வதை எந்நாளும் நிறுத்தாதீர்கள்" நான் தினமும் ஆறு மணி நேரம் புத்தகங்கள் வாசிக்கின்றேன்.அந்த ஒரு வழக்கம் மட்டுமே இன்று உலகின் தலைசிறந்த முதலீட்டாளனாக என்னை ஆக்கிஇருக்கின்றது.வாசிப்புகளின் மூலமே என் முழு சாம்ராஜ்யத்தையும் இன்று நான் கட்டி எழுப்பியுள்ளேன்.
எனவே உங்கள் வாழ்வில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதை விட்டுவிடாதீர்கள்.உங்கள் அறிவை கூர்மையாக்குவதை நிறுத்திவிடாதீர்கள். ஏனென்றால் உங்களிடம் எவ்வளவு அறிவும்,அனுபவமும் இருக்குமோ அவ்வளவு எளிதாக உங்களால் மிக அதிக பணத்தை பெற்றுவிட முடியும்.இந்த அறிவாள்தான் என் வாழ்வில் பலநூறு பில்லியன் டாலர்களை நான் சம்பாரித்து இருக்கின்றேன்.நீங்களும் உயர்ந்த வெற்றியாளராக வேண்டுமானால் "இப்பொழுதிலிருந்தே உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். அத்தகைய முதலீட்டால் மட்டுமே பணம்,புகழ்,ஆளுமை இவை அனைத்தையும் உங்களால் பெற முடியும்...!