வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி:
Previous Post
Next Post