செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது
கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது

1939 ஆங்கிலேயே காலம் தொட்டு இந்திய குடியரசு அமைத்த பின்பும் கல்வி மாநில ஆட்சியின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.ஆனால் 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உள்நாட்டு பிரச்சனைகளால்  நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி நாடு முழுவதும் அவசர சட்டத்தை அறிவித்தார்.அச்சமயம் பல்வேறு அரசியல் சட்டரீதியான உரிமைமீரல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அந்த உரிமைமீரல்களில் ஒன்றுதான் கல்வி உரிமையை ஒன்றிய அரசு தன் அதிகாரத்திலேயே வைத்துக்கொண்டதும் என்பதாக நம்மால் கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கும் பொழுது அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய துணை குடியரசு தலைவரான வெங்கைய நாயுடு அந்த அவசர சட்டத்திற்கு வேறொரு காரணத்தையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டு காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது இந்திரா காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினருக்கான வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அறிவித்ததே இந்த அவசரநிலை சட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

எது எப்படியோ.!

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1977 லிலேயே அவசர சட்டம் நீக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசு அரசியல்சாசன சட்டத்தின்படி கல்வியில் மாநிலத்திற்கான சுய உரிமையை வழங்கமறுத்துவிட்டதே மாநில ஆட்சிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.மாநில அரசிடம் கல்வியை வழங்காமல் போனதற்கான பொய் காரணத்தையும் ஒன்றிய அரசு அன்றே முன் வைத்தது.அதாவது தரமான சீரான ஒரேமாதிரியான கல்வியை ஒன்றிய அரசே வகுத்து வழங்கும் என்பதுதான் அந்த மாநில உரிமையை பறித்துக் கொள்வதற்கான பொய்யான வாக்குறுதி.

வாக்குறுதியை வழங்கிய அரசு அதில் உண்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.தரமான கல்வி என்ற பெயரில்  பல்வேறு மாநிலங்களிலும் மாநில மொழியை புறக்கணித்து விட்டு இந்தியை புகுத்த நினைத்ததும், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பாடுபட்டதுமே வெளிச்சத்திற்கு வந்தது.அது அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறிக்கும் படியான நீட் போன்ற தேவையற்ற தேர்வுகளையும் தானே முன்னெடுத்து நிறுத்துவதின் மூலம் தனக்கு சாதகமான குறிப்பிட்ட சாரார்களை மட்டும் குறிப்பிட்ட துறைகளில் ஆக்கிரமிப்பு செய்யவே வழி வகை செய்துகொண்டது.

(குறிப்பு: இன்றைய இரயில்வே துறையிலிருந்து,தபால் துறை வரை இந்தியின் ஆதிக்கமும் வடவர்களின் பங்களிப்புமே அதிகம் காணப்படுவது மத்திய அரசின் வஞ்சகத்திற்கு பெரும் உதாரணமாகும்.)இதையெல்லாம் கேள்வி கேட்க எந்த மாநிலங்களும் துணியாத நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி உரிமையை கோரியிருப்பதும்,நீட் போன்ற போலியான தேர்வுகள் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் உயர்கல்வியை பறிப்பதை எதிர்ப்பதும் தமிழக மக்களுக்கான விடியாலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.!
Previous Post
Next Post