![]() |
ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள் |
ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள்
1.உண்மையான ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்ந்துகொண்டே இவ்வுலகின் ஒரு தூசியின் மீது கூட பற்று வைக்காதவனாக இருக்க வேண்டும்.
2.அடுத்தவர்கள் நல்லது செய்தால் அதுபோல நாமும் செய்ய வேண்டும் என்று மனதுக்கு ஆணையிடுங்கள்.அடுத்தவர் தவறு செய்தால் அதனைப் போன்று நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று உங்கள் மனதிற்கு அறிவுரை கூறுங்கள்.
3.ஒரு இருட்டரையில் இருந்தாலும் உங்கள் முன் உங்களுக்கு பிடித்த ஒரு விருந்தாளி இருப்பதுபோலவே உணருங்கள்.உங்கள் உண்மையான தன்மை தவிர வேறு எந்த உணர்ச்சியையும் அதிகப்படுத்திக்காட்டாதீர்கள்.
4.ஏழ்மை உங்கள் சொத்து.அதை சொகுசு வாழ்க்கைக்கு எப்பொழுதும் பரிவர்த்தனை செய்துவிடாதீர்கள்.
5.முட்டாளாகத் தோன்றும் ஒருவன் முட்டாளில்லாமல் இருக்கலாம்.தனது ஞானத்தை தனக்குள் கவனமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
6.ஞானம் என்பது சுய கட்டுப்பாட்டினால் தானாக வருவது.அது ஏதோ வானத்தில் இருந்து உங்கள் கைகளில் விழுவதல்ல.
7.பண்பே ஞானம் அடைவதின் முதல் படி.உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு முன் அவர்களே உங்களைப்பற்றி அறிந்து கொள்ளட்டும்.
8.ஒரு மேலான இதயம் எப்பொழுதும் தன்னை முன்நிறுத்துவதில்லை.அது அதிகம் வார்த்தைகளற்று அமைதியாக காணப்படும்.நவரத்தினங்களை காட்டிலும் அது விலைமதிப்பற்றதாக இருக்கும்.
9.ஒரு சிறந்த மனிதனுக்கு எல்லா நாட்களும் அதிஷ்ட நாட்களே.காலத்தை அவன் கடந்துசெல்லவிடுவதில்லை.அதனுடனேயே அவன் நடக்கின்றான்.புகழோ இழிவோ அவனை அசைக்க முடிவதில்லை.
10.திருத்து உன்னை மட்டும்.அடுத்தவர்களை அல்ல.சரியையும் தவறையும் எக்காலத்திலும் விவாதிக்காதே.
11.சில சரியான விஷயங்கள் பல காலங்களாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.நூறு ஆண்டுகளுக்கு பின்னர் கூட ஒரு விஷயம் சரியானது என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.எனவே தற்காலிகமாக நீ எதனையும் தூக்கி நிறுத்த அவசியமில்லை.
12.காரணத்தோடு வாழ்.பலன்களைப்பற்றி கவலைப்படாதே.அதை இந்த பேரண்டம் கவனித்துக்கொள்ளும்.ஆகவே ஒவ்வொரு நாளையும் சமாதானமான முறையில் வழிநடத்து.