வெள்ளி, 3 செப்டம்பர், 2021

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.
பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

முன்னுரை:

உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப்பற்றிப்பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன். மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும்,மனரீதியிலும்,பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில்தான் இன்றுவரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.

அவளை மீண்டும் மீட்டு எடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதலபாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணரமுடிகின்றது.இத்தகைய பெண் அடிமைத்தனம் சம்மந்தமாக"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற எனது சிறிய புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கின்றேன். அவற்றின் ஒரு சிறிய பகுதியயை மட்டும் இந்த கட்டுரையில் பதிவுசெய்கின்றேன்.இந்த கட்டுரையில் பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும் எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.

இதனை படிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை உங்களுக்கு அற்பணம் செய்கின்றேன்.நீங்களும் ஒரு இனத்திற்கு எதுரான இந்த சமூகத்தின் மிகக்கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக்கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

பெண் அடிமைத்தனம்:

1.வெளியில் செல்லும் பெண்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பது.

வேலைக்காகவோ அல்லது தனது தேவைக்காகவோ அல்லது இந்த உலகை ரசிக்கவேண்டும் என்ற தனிப்பட்ட ஆசைக்காகவோ வெளியில் செல்லும் பெண்களின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் கண்ணோட்டம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த சமூகத்தில் புரையோடிப்போய்தான்  கிடகின்றது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.என்னதான் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து வேலை செய்யத்துவங்கிவிட்டனர் என்று போலியாக சமூகத்திற்கு முன்பு மார்தட்டிக்கொண்டாலும் இந்த சமூகம் அவர்களை புறக்கணிப்பதையே வரவேற்கின்றது என்பதையே நிதர்சனமான உண்மையாக நான் காண்கின்றேன்.

உண்மையில் இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட ஒரு பெண் எங்காவது யாராவது ஒருவரால் அவளுடைய நடத்தையாள் சந்தேகிக்கப்படுகின்றாள் என்பதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?ஒருபோதும் முடியாது..!ஏனென்றால் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால் அவள் சந்தேகத்திற்குறியவள் என்று இந்த சமூகம் ஒரு அவளம்நிறைந்த பார்வையை கட்டமைத்து வைத்திருக்கின்றது.மேலும் வீட்டின் உள்ளே இருந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பணிவிடை செய்வதுதான் ஒரு பெண்ணிற்கான சிறந்த இலக்கணம் என்பதாகவும் அது வெளிப்படையாகவே வலியுறுத்திக்கொண்டுமிருக்கின்றது.

அதற்கு தோதுவாக முந்தைய வழிகாட்டிகளான மூதாதையர்களும் வீட்டிற்கு சேவகம் செய்வதையே பெண்களின் மகத்தான பணியாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபத்தான சமூக கட்டமைப்பைவிட்டும் ஒரு சுதந்திரமான சிந்தனையுள்ள பெண் வெளியில் வர யோசித்துப்பார்க்கவே முடியாமல் போய்விடுகின்றாள்.இப்படி ஒரு பெண் தன் வாழ்விலும் ஜெயிக்க வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அளவிற்கு அவளை இந்த சமூகம் வீட்டு சூழலுக்குள் வைத்து பணிவிடை செய்வதற்கு மட்டும் நிற்பந்திக்கும் அந்த நிலையைத்தான் இங்கு நான் பெண் அடிமைத்தனத்தின் உச்சமாக கருதுகின்றேன்.

அச்சம்,நாணம் ,என்பதே பெண்களிடம் காணப்பட வேண்டிய சிறந்த பண்புகள் என்பதாகக்கூறி அவளை நான்கு சுவற்றிற்குள் அடைக்க நினைப்பதையே இந்த சமூகம் அவளுக்குச் செய்யும் மாபெரும் அநீதியாகவும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஆக ஒரு சிறந்த பெண் என்பவள் தன் வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பால், வெளியில் செல்லவேமாட்டால் என்ற அடக்குமுறை நிறைந்த சமூக கட்டமைப்பை சித்தரித்ததில் இந்த சமூகத்திற்கே பெரும்பங்கு இருப்பதாக இங்கு மிக ஆணித்தரமாக பதிவுசெய்துகொள்கின்றேன்.

அடுத்தபடியாக ஒருபெண் சந்திக்கும் மிகப்பெரும் அநீதி மற்றும் அடிமைத்தனம் அவளின் துணையை தேர்ந்தெடுப்பதில்தான் எனபதாகவே நான் காண்கின்றேன்.வாருங்கள் அதுகுறித்த சில விவரங்களையும் இங்கே பார்த்துவிடுவோம்.

2.துணையை தேர்ந்தெடுப்பதில் உரிமையை பறிப்பது.

ஒரு பெண் தான்உறவாடுவதற்கு தகுதியான நபரை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் கூட கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.ஆம்.! தங்கள் வீட்டுப்பெண் அல்லது தங்கள் குடும்பத்துப்பெண் தாங்கள் விரும்பிய நபர்களை தவிர்த்து வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே கூடாது என்ற ஆதிக்க உணர்வு உண்மையில் இன்றும் பெரும்பாலானோரிடம் புரையோடிப்போய் கிடப்பதாகவே நான் காண்கின்றேன்.

அவளுடைய கற்பும்,குலமும் கோத்திரமும் மதிக்கப்பட வேண்டியதுதான் என்றாலும் அதனை விரும்புவதற்கும்,விரும்பாமல் போவதற்கும் அவளுக்கு முழு உரிமையுள்ளது என்பதை ஏற்கமுடியாத இந்த சமூக கட்டமைப்பையே பெண் அடிமைத்தனத்திற்கு உதவும் ஆபத்தான சமூக கட்டமைப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன்.உண்மையில் ஒரு பெண் தான்விரும்பிய நபருடன் பழகக்கூடாது என்று நிர்பந்திப்பதைவிட மிக கொடிய பெண்அடிமைத்தனம் வேறு எதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆனால் அது விஷயத்தில் ஒரு பெண்ணின் உரிமையை பரிப்பதிலேயே இன்றைய சமூகம் மிக வலுவான சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இந்த மனித இனத்திற்கான சாபமாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பர்களாக இருக்கட்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் தன் வீட்டார்களின் ஆசைக்கினங்கவோ அல்லது தான் சார்ந்த சமூகத்தின் ஆசைக்கினங்கவோதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிலையை உறுவாக்கியதில் இந்த அவளம் நிறைந்த சமூகத்திற்கே பெரும் பங்கு இருப்பதாக நான் காண்கின்றேன்.

தொடர்ந்து வாசிக்க அமேசானில் இடம்பெற்றிருக்கும் எனது"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற புத்தகத்தை பெற்று பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

Previous Post
Next Post