வியாழன், 9 செப்டம்பர், 2021

இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்

இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்
இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்
  •  பெரும் பெரும் வீடுகள் உள்ளன ஆனால் சுற்றத்தார்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
  •  அதிகப்படியான கல்வி எல்லோருக்கும் கிடைத்துவிட்டது ஆனால் அடிப்படை அறிவே இங்கு இல்லாமல் போய்விட்டது.
  • உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் உறுவாகிவிட்டது ஆனால் நோய்க்கு பலியாகுபவர்கள் இன்னும் குறைந்தபாடில்லை.
  • விண்ணை தொட்டுவிட்டனர் ஆனால் பக்கத்துவீட்டாரை இன்னும் சந்திக்கவில்லை.
  • அதிகப்படியான வருமானம் வந்துவிட்டது ஆனால் மனநிம்மதி மட்டும் இன்னும் வரவில்லை.
  • சிந்திக்கும் ஆற்றல் வானளவாக உயர்ந்துவிட்டது ஆனால் இழிவு செய்யும் எண்ணம் இன்னும் நீங்கியபாடில்லை.
  • அறிவு அதிகரித்துவிட்டது ஆனால் புரிந்துணர்வு தொலைந்தே போய்விட்டது.
  • விலையுயர்ந்த கடிகாரங்கள் கையை அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் நேரத்தை சரியாக பயன்படுத்துவது நீண்ட ஓய்வுபெற்றுவிட்டது.
  • பந்தங்கள் கூடிக்கொண்டே செல்கின்றது ஆனால் அனைத்தும் நிலைத்திருப்பதற்கு தவறிவிட்டது.
  • சமூக வலைதலங்களில் லட்சக்கணக்கான நண்பர்கள் கூட்டம் குழுமிவிட்டது ஆனால் உண்மை வாழ்வில் ஒருவர் கூட இல்லாத வெறுமை துரத்துகின்றது.
  • மனிதர்களின் எண்ணிக்கையோ உலகை நிரப்பிவிட்டது ஆனால் மனித நேயம் மட்டும் தான் காணமல் போய்விட்டது.
  • இறப்புகளும் இழப்புகளும் இரட்டிப்பாகிவிட்டது ஆனால் இறப்புகளையும் இழப்புகளையும் கூட படம் பிடித்து இன்பம் கானும் ஒரு இழி சமூகம் உறுவாகிவிட்டது.
  • இந்த உலகை மிருகங்கள் கூட பாதுகாக்கவே முற்படுகின்றது ஆனால் இந்த மனிதன்தான் அவற்றை அழித்துவிட எண்ணுகின்றான்.
  • உயிரோடு இருக்கும் காலமெல்லாம் பெற்றோர்கள் துரத்தப்படுகின்றனர். ஆனால் இறந்த பின்போ நிழல் படங்களாக வைக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றனர்.
  • உணவு உறைவிடம் மற்றும் சொந்தங்கள் எல்லாம் இருந்தும் இணைய தளம் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாததாக மாறிவிட்டது.
  • ஒரு தாய் பல குழந்தைகளையும் அக்கரையோடு பார்த்துக் கொள்கின்றாள் ஆனால் அவளை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லாமல் தெருவில் விடப்பட்டுவிடுகின்றாள்.
  • உணவு சுவையாக இல்லை என்பதற்காகவே குப்பையில் கொட்டப்படுகின்றது ஆனால் பசியை போக்க ஏதாவது கிடைக்காதா என்றொரு கூட்டம் மற்றொரு புறம் அலை மோதிக்கொண்டிருக்கின்றது.
உண்மையில் இந்த உலகம் ஒரு விசித்திரமான நிலையை அடைந்திருப்பதாகவே காண முடிகின்றது.ஏனெனில் ஒரு புறம் தன் உண்மை முகத்தை மறைத்துக் கொள்ள விரும்புகின்றது ஆனால் மற்றொரு புறம் பிற மனிதர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தபோராடுகின்றது..! 

Previous Post
Next Post