 |
யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai) |
முன்னுரை
இன்று செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்றைய நன்நாளிலே அவரை இந்த தமிழக மக்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூற கடமைபட்டுள்ளனர்.ஏனெனில் இந்த தமிழ் சமூகத்தை பீடித்திருந்த அடக்குமுறைகளையும் அடிமைத்தனங்களையும் அரசியல் ரீதியாக தவிடு பொடியாக்கிக்காட்டிய ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்த மாமனிதர் அவர்.
அவருடைய வரலாற்றை சுறுக்கிக்கூறிவிட முடியாது என்பது எனக்குத் தெரிந்தும் வேறுவழியின்றி மிக வட்டுறுக்கமாக இந்த கட்டுரையில் அவரின் ஒப்பற்ற வாழ்வின் சிறு பகுதியை மட்டும் பதிவு செய்கின்றேன்.அவருடைய தமிழ் மண்ணிற்கான சேவையை தொகுத்து வந்து கொண்டிருக்கின்றேன். இறைவன் நாடினால் மிகவிரைவில் அவற்றை புத்தமாக வெளியிடுகின்றேன்.
இங்கு அறிஞர் அண்ணாவின் வாழ்வை மூன்று பகுதிகளாக பிரித்திருக்கின்றேன்.
1.அவர் பெரியாரிடம் கற்ற சமூக அக்கரை மற்றும் விடுதலை.
2.ஆசானுக்கே ஆசானான ஆச்சர்யமிகுந்த அவரது அரசியல்.
3.சமூகத்திற்கு ஆற்றிய அவரது பணிகள் மற்றும் தொண்டுகள்.
1.பெரியாரிடம் கற்ற சமூக அக்கரையும் விடுதலை உணர்வும்.
அறிஞர் அண்ணாவின் வாழ்வை குறித்து பேசும் பொழுது அங்கு பெரியாரை விட்டுவிட்டு செல்லவே முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் பெரியாரோடே இரண்டற கலந்து அவரின் ஆழமான அனைத்து சமூக நீதிகளையும் மேலும் இந்த தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அங்குளம் அங்குளமாக அரிஞர் அண்ணா பாடம் படித்திருப்பதை வாரலாறு மிக வெளிப்படையாகவே எடுத்தியம்புகின்றது.
அவ்வளவு ஏன் பெரியாரின் வலது கையாகவோ அல்லது இடது கையாகவோ இல்லாமல் இரு கையாகவுமே திகழ்ந்தவர்தான் அறிஞர் அண்ணா என்று கூறினாலும் அது மிகையாகாது.உண்மையில் வரலாற்றை மிக ஆழமாக உற்றுநோக்கும் பொழுது அறிஞர் அண்ணா பெரியாரின் அலப்பரிய நம்பிக்கைக்கு முழு பாத்திரமான ஒரு செல்லப்பிள்ளை என்றும் கூட குறிப்பிடலாம்.அறிஞர் அண்ணா பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் துவங்கிய ஆரம்ப இடமே பெரியாரின் "விடுதலை" பத்திரிக்கையும் ,"குடியரசு" பத்திரிக்கையும் தான்.
ஆம்...!
அங்கிருந்து தான் அறிஞர் அண்ணாவின் நீண்ட நெடிய அரசியல் மற்றும் சமூக தொண்டுகள் போன்ற சிந்தனை ஓட்டங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பெரியாரின் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் திராவிட தத்துவார்த்தங்களையும்,கடவுளின் பெயராலும் சாதி,மதங்களின் பெயராலும் தன் இன மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குபவர்களின் உண்மை முகங்களையும் பெரியாரிடமிருந்து மிக சாதூர்யமாக அறிஞர் அண்ணா கற்றரிந்தார்.அதன் விளைவாகவே நேரடியாக சமூகத்தொன்டாட்ட அரசியலில் குதித்தார்.
2.ஆசானுக்கே ஆசானான அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல்.
அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணமும் பெரியாரிடமிருந்தே துவங்கியதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.ஆம்...!அறிஞர் அண்ணா முதல் முதலில் பெரியார் தலைமையில் காங்கிரசிற்கு எதிராக உறுவாக்கப்பட்ட நீதிக்கட்சியிலிருந்துதான் தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.தன்தமிழ் மக்களை சுரண்டிப்பிழைத்துக்கொண்டிருக்கும் காங்கிரசின் அரசியலில் முற்றிலும் நம்பிக்கை இழந்த ஆசானிற்கு மக்களுக்கான புதிய அரசால் தமிழ் சமூகத்தை காத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் முயற்சியில் அரசியல் கலமாடத் துவங்கினார்.
தன் சமூகத்தின் மீது தெலிக்கப்பட்டிருக்கும் இழிவை போக்குவதற்கு முதல் தடைக்கல்லாக இருப்பதே இந்த தரித்திரம் பிடித்த அரசியல்தான் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த பெரியார் தன் செல்லப் பிள்ளையான அண்ணாவின் நிலையும் மாறிவிடுமோ என்று அஞ்சினார்.ஆனால் அங்கு தான் அறிஞர் அண்ணா தன் ஒப்பற்ற ஆசானின் கனவுகளை காக்க வந்த பெரும் போராளி என்பதை நிறூபித்து காண்பித்து ஆசானுக்கே ஆசானாக உறுவெடுத்தார்.
அரசியலில் பயணித்துக்கொண்டே பெரியாரின் திராவிடக்கொள்கையை தன் எழுத்தாலும், நாடகங்களாலும், திரைப்படங்களாலும் எட்டுத்திக்கும் பரந்து விரியச்செய்தார்.தன் கட்சிக்கு பெயரே"திராவிட முன்னேற்ற கழகம்"என்று பெயர் சூட்டினார்.நாடாலுமன்றத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுக உரையிலேயே தன்னை திராவிடன் என்று அடையாளப் படுத்திக்கொண்டார்.இந்தியாவிலேயே காங்கிரஸிற்கு எதிராக முதல் முதலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் காண்பித்தார்.
3.அரிஞர் அண்ணாவின் அரும்பணிகள்.
- இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நின்றார்.
- மும்மொழிக் கொள்கையை முடக்கி இரு மொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார்.
- இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வடவர்கள் நினைத்த போது நாடாளு மன்றத்தையே கேள்விக்கனைகளால் திக்குமுக்காடச் செய்தார்.
- தமிழகத்தின் மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றினார்.
- ஜமீன்தாரிகளின் நிலச்சுரண்டலையும் பிராமணத்தின் மனித உரிமை மீரல்களையும் "நல்ல தம்பி"மற்றும் "வேளைக்காரி" போன்ற திரைப்படங்களால் தோழுறித்து காண்பித்தார்.
- ஆரிய மாயை என்ற புத்தகத்தை எழுதி ஆரியத்தின் கோர முகத்தை உலகறியச் செய்தார்.இதனால் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
- "Home Land "என்ற ஆங்கில வார பத்திரிக்கையாலும் "திராவிடம்"என்ற தமிழ் இதழாலும் காங்கிரஸார்கள் மற்றும் பிராமணர்களின் கூடாரங்களை அசைத்துக் காண்பித்தார்.
- இன்னும் இந்த தமிழ் மண்ணிற்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராலம் ஏராலம்...!அவைகள் அனைத்தையும் இந்த சிறிய கட்டுரையில் சுறுக்கிவிட முடியாது என்பதால் வருத்ததுடனே கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருகின்றேன்.
இறுதியில் அறிஞர் அண்ணா போயிலை உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் புற்று நோய்க்கு ஆளானார்.அது அவரின் உயிரையும் குடிக்கத் தவறவில்லை.எனவே அதே நோயால் காலமுமானார்.அவருடைய இறுதி ஊர்வலமோ இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாறாக மாறிப்போனது.
ஆம்...!
இந்த மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசித்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட 1 கோடியே 50 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கிண்ணஸ் புத்தகத்தில் இன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்த தமிழ் மக்களுக்காக போராடிய அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இன்று கிண்ணஸ் புத்தகங்களை எல்லாம் தாண்டி எக்காலமும் தமிழர்களின் நெஞ்சங்களில் கலந்துவிட்ட அன்பு அண்ணண் ஆறடி பள்ளத்தில் ஆழ்ந்த துயில் கொண்டாலும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் தமிழ் மக்களை காப்பதால் உயிர்ப்புடனே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அத்தகைய தமிழ் மண்ணின் நேசனை அவர் பிறந்த இன்று நினைவு கூறுவதில் தமிழ் மகன்களாக நம்மில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.