![]() |
யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார் |
தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு மகத்தான "கதாநாயகன்"தான் பெரியார் என்ற போற்றுதலுக்குறிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்கள் என்பதாகவே நான் காண்கின்றேன்.ஏனெனில் அவருடைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தையும் நான் உற்றுநோக்கிய சமயம் இந்த தமிழ் சமூகத்தை உயர்த்தி நிறுத்துவதிலேயே அவர் தன் வாழ்வு முழுவதையும் அற்பனித்து இருப்பதை என்னால் காண முடிந்தது.
இன்றைய நிகழ் உலகின் கதாநாயகர்கள் அனைவரும் மக்களுக்கு பண உதவி செய்தோ அல்லது ஏதேனும் பொருள் உதவி செய்தோ தன்னை கதா நாயகர்களாக நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.ஆனால் பெரியாரை என்னால் அப்படி காணமுடியவில்லை.மாறாக அவர் ஒரு சமூகத்திற்கான வாழ்வியல் விடியளுக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்திருப்பதை காணும்பொழுது எவ்வாறு நான் அவரை உண்மை கதாநாயகன் என்று கூறாமல் ஒரு எழுத்தாளனாக கடந்துவிட முடியும்.?
எனவேதான் பெரியாரின் வாழ்வியல் குறித்த அறிமுகமான என்னுடைய புத்தகத்திற்கு பெயரே "தமிழர்களின் கதாநாயகன் பெரியார்" என்று பெயரிட்டுள்ளேன்.உண்மையில் அவர் இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மிகப்பெரும் வில்லனாக திகழ்ந்தார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அடித்து, அடக்கி ஆழவும்,சுரண்டிப் பிழைக்கவும் நினைத்தவர்களுக்கே வில்லனாக இருந்தார் என்பதை கவனிக்கும் சமயம் அங்கும் அவர் உண்மை கதாநாயகன் என்ற பெருமையையே சேர்த்துக்கொண்டுவிட்டார் என்பதாகவே நான் கருதுகின்றேன்.
பெரியாருக்கான அறிமுக உரையான என்னுடைய சிறிய புத்தகத்தில் மூன்றே மூன்று பகுதிகளை மட்டுமே பதிவு செய்வது எனது நோக்கம் என்பதால் பெரியார் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் நான் தொகுக்கவில்லை என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுவிடுகின்றேன்.ஏனெனில் அந்த புத்தகத்தில் பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் உண்மை கதாநாயகனாக திகழ்ந்ததற்கான அடிப்படை காரணிகளை மட்டுமே தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.
அதாவது பெரியார் வாழ்ந்த சமயத்தில் இந்த தமிழ் சமூகம் எத்தகைய நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்பது சம்மந்தமாகவும் அதனை பெரியார் எப்படி கலைஎடுத்தார் என்பது சம்மந்தமாகவும் மேலும் தமிழர்களையும் தமிழ்மொழியையும் குறிவைத்து தாக்க நினைத்தபோது அதனை எவ்வாறு உயர்த்தி நிறுத்தினார் என்பது சம்மந்தமாகவும் மட்டுமே இந்த சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இறைவன் நாடினால் பெரியாரின் முழு வாழ்வியலையும் தனி ஒரு புத்தகமாக தொகுத்து வழங்குகின்றேன்.(அப்பணியை செய்து கொண்டும் இருக்கின்றேன்.)
பெரியார் தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கதாநாயகனாக ஆவதற்கு அன்றைய சமூக கட்டமைப்பே காரணமாக இருந்தது என்பதால் பெரியார் காலத்தில் அன்றைய சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பது சம்மந்தமாக நாம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கின்றது என்பதால் முதலில் அது சம்மந்தமாக இங்கு பார்ப்போம்.
பெரியார் காலத்தில் தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது.?
- குறிப்பிட்ட சில மக்கள் சூத்திரர்கள் எனக்கூறி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தைவிட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
- பார்ப்பனர்கள் என்று கூறப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மட்டும் உயர் சாதியினர் என்றும் அவர்களுக்கு சரி சமமாக ஏனைய எச்சமூகத்தை சார்ந்தவர்களும் இடம் பெறக்கூடாது என்ற சமூக அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.
- கீழ் சாதியினராக பார்க்கப்படுவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது என்பது தான் கல்வி கொள்கையாக இருந்தது.
- அரசு அலுவல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற சூழலே மிகைத்திருந்தது.
- உயர் சாதியினராக பார்க்கப்படும் பார்ப்பனர்கள் புழங்கும் பொது இடங்களில் கீழ் சாதியினர் புழங்கக் கூடாது என்றும் இன்னும் அவர்களைப் போன்று செறுப்போ அல்லது தோளில் துணியோ அல்லது குடை பிடித்துக் கொண்டோ தெருவில் நடமாடக் கூடாது என்றும் வெளிப்படையாகவே தடை இருந்தது.
- அவ்வாறே கீழ் சாதியினராக பார்க்கப்படுபவர்கள் பொது குழங்களிலோ அல்லது கிணருகளிலோ தண்ணீர் அருந்த முடியாது.
- ஊரின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் தேனீர் கடையிலும் கீழ் சாதியினர் கொட்டங்குச்சியில் தேனீரை பெற்றே குடிக்க வேண்டும் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
- அசிங்கமான வார்த்தைகளாலும் இழிவான பெயர்களாலும் உயர் சாதியை சார்ந்த சிரியவர்கள் அழைத்தாலும் கீழ் சாதியினர் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- உணவு விடுதிகள் ,குளிக்கும் அறைகள் மற்றும் கோவில்களுக்குள் உயர் சாதியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
- மாட்டு வண்டிகளில் அமர்ந்து செல்லக் கூடாது,அதிலும் குறிப்பாக எதிரில் பார்ப்பனர் வந்துவிட்டால் ஓரமாக ஓடிச் சென்று கண்ணில் படாதவாறு நின்று கொள்ள வேண்டும்.
- கீழ் சாதியினர் தங்க நகைகளை ஒரு பொழுதும் அணியக் கூடாது.
- கீழ் சாதியினர் மண் சுவரால் ஆன ஓலை குடிசைகளில் மட்டுமே வாழ வேண்டும்.
- கீழ் சாதியினர் உலோக பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
- கீழ் சாதி பெண்கள் மாராப்புத் துணி அணியக்கூடாது என்றும் இன்னும் மேல் சட்டை அணியக் கூடாது என்றும் பனிக்கப்பட்டிருந்தனர்.
- பெண்கள் என்றாலே இழி பிறவிகள் என்று பரவலாக கருதப்பட்டு வீட்டில் எடுபிடி வேலைக்கென்றே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இந்நாட்டை ஆண்ட சேரர்கள் ,மற்றும் சோழர்கள் ,மற்றும் பாண்டியர்கள், மற்றும் நவாப்கள் ஆகிய அனைவரின் ஆட்சி காலத்திலும் கொஞ்சமும் குறைவின்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தாரால் மட்டுமே அரங்கேறியதை வரலாற்றின் மூலம் அதிகாரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய மனித உரிமை மீறல்களையெல்லாம் கலைவதற்கு பெரியார் கையாண்ட வழிமுறைகள்தான் அவரை தமிழ் மண்ணின் போற்றுதலுக்குறிய கதாநாயகனாக நிலைநிறுத்தியது என்பதாகவே நான் நம்புகின்றேன்.
எனவே அடுத்தபடியாக தமிழ் மக்களின் இந்த இழிவை துடைக்க பெரியார் எத்தகைய வழிமுறைகளை கையாண்டார் என்பதைக் குறித்து பார்ப்பதே இங்கு உசிதமாக இருக்கும் என்பதால் அவற்றைப்பற்றி பார்ப்போம்..!
பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை கலைய மூன்று முக்கிய ஆயுதங்களை மிக வீரியமாக பயன்படுத்தியதாக வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.
1.சொற்பொழிவு பிரச்சாரம்.
2.எழுத்துப் பிரச்சாரம்.
3.தமிழுக்கான அரும்பணியும் அரசியல் பங்கும்.
பெரியார் இந்த மூன்று பெரும் ஆயுதங்களாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை துடைத்துவிடலாம் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணிக்க முன்வந்தார்.
1.சொற்பொழிவு பிரச்சாரம்.
தொடர்ந்து வாசிக்க என் புத்தகத்தை அமேசானில் பெற்று பெரியாரின் ஒப்பற்ற வாழ்வின் அந்த மூன்று அரும்பணிகளும் எவ்வாறு இருந்தது என்பதையும் அறிந்து பலனடைந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.