அரசு மற்றும் அரசியல் என்பது மக்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒப்பற்ற புனிதமிகு இடம் என்றே நாம் முன்னோர்கள் மூலமும் வேதங்களின் மூலமும் கேள்விபட்டிருப்போம்.ஆனால் அதுதான் இன்று மிருகங்களின் கூடாரமாக இருக்கின்றது என்பதை யாராவது நினைத்து பார்த்ததுண்டா..?சமீப காலமாக இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச அரசின் துணையோடு பல்வேறு மனித உரிமைமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டேஇருக்கின்றது.ஏனைய மக்களுக்கு வெறும் செய்தியாக மட்டும் அது பகிரப்பட்டும் வருவது உண்மையில் காலத்தின் சாபக்கேடாகவே நான் காண்கின்றேன்.
அவற்றையெல்லாம் தொடர்ந்து நேற்றய தினம் உ.பி யில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நொறுங்கச்செய்கின்றது.தங்களின் வாழ்வாதார பிரச்சனையை முன்னிட்டு பல நாட்களாக போராடி வந்த விவசாயிகளை எவ்வித ஈவுஇரக்கமுமின்றி மத்திய மந்திரியின் மகனின் வாகனம் அங்கிருந்தவர்களை மோதி தள்ளிவிட்டு செல்லும் அந்த காட்சி இன்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.அதிகார போதையில் ஆடிய அந்த கோரத்தாண்டவம் இந்திய மக்களையே திகைப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.
☝
காணொளி
இந்த காணொளியை கண்ட பிறகும் இதனை சரிகாண்பவர்கள் உண்மையில் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் என்றே நான் கருதுகின்றேன்.அரசும் அதிகாரமும் எப்பொழுது மக்களை புழுப்பூச்சுக்களாக பார்க்க ஆரம்பித்து தங்களை கடவுளாக எண்ண ஆரம்பித்துவிடுமோ அன்றே அம்மக்களின் வாழ்வு நரகில் தூக்கி எறியப்பட்டுவிட்டது என்பதையே நான் தொடர்ந்து கூறிவருகின்றேன்.
இன்று அதனை நேரில் காண்கின்றேன்.மக்கள் அந்த காட்டுமிராண்டிகளுக்கு தங்களின் மக்கள் சக்தியை எடுத்தியம்பும் நேரமாகவே இதனை நான் கருதுகின்றேன்.எனவே மக்கள் இத்தகைய செயலுக்கு உ.பி.அரசை பொறுப்பேற்கச் செய்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றும் இத்தகைய மாபாதக செயலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கான கோரிக்கையை முன் நிறுத்தியே போராட்டங்களையும் தொடர வேண்டும் என்றும் எனது இந்த பதிவின் மூலம் வேண்டிக்கொள்கின்றேன்.