 |
பணக்காரன் ஆவதற்கு வழி என்ன |
உலகில் எல்லோரும் செவந்தர்களாக வாழவேண்டும் என்று விரும்புகின்றனர்.ஆனால் அதற்கான வழியை அறிந்து கொள்ள பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர்.ஆகவே அவற்றை இங்கு சற்று விரிவாக பார்ப்போம்.அன்பர்களே..!இந்த உலகில் நீங்கள் பணக்காரர் ஆவதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றது.
1.பணத்தின்(Value)மதிப்பை அறிந்து வைத்திருப்பது.
2.பல வழிகளில் வருமானம் தரும் வியாபாரங்களை தொடர்ந்து கொண்டே இருப்பது.
நம்மில் பலருக்கும் பணத்தின் மதிப்பு சரியாக தெரியாததாலே பல சமயங்களில் அதிக செல்வத்தை திரட்டும் வாய்பிருந்தாலும் அதனை பயன்படுத்த தவறிவிடுகின்றோம்.எனக்குத்தெரிந்து பணத்தின் மதிப்பை அறியாததாலே இந்த உலகில் பெரும்பாலானோர் பணம் இருந்தும் தோற்றுப்போனார்கள்.எனவே பணத்தின் மதிப்பு குறித்து ஒரு சில உண்மைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.உங்கள் மனம் அதை ஏற்றால் எடுத்துக்கொள்ளுங்கள்.இல்லையானால் அது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கடந்துவிடுங்கள்.
பணத்தின் மதிப்பு..!
அன்பு,பாசம்,உறவு இவைகளே இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும்விட சிறந்தது என்று நம்மில் பலரும் கருதுவது உண்மைதான் என்றாலும் அவற்றையெல்லாம் கட்டி எழுப்புவதற்கு பணமே அடித்தளமாக இருக்கின்றது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.பணத்தின் மீது ஆசையில்லை என்று கூறுபவர்களில் பலரையும் நான் போலிகளாகவே பார்க்கின்றேன். உண்மையில் அவர்களையே அதிகம் பேராசை கொண்டவர்களாக காணமுடிகின்றது.
பணம் சந்தோஷத்தை தராது என்பது உண்மைதான் என்றாலும் அது இல்லாமல் போனால் நம் நிம்மதியே இல்லாமல் போய்விடும் என்பதும் அதைக்காட்டிலும் உண்மையாகும்.ஏனென்றால் வறுமையைவிட செல்வ செழிப்பு உயர்வானதாகவே இருக்கின்றது.நிம்மதியற்ற வறுமை மன நிறைவு நிறைந்த செல்வத்திற்கு ஒருபோதும் சம்மாகாதுதானே..?
கடினமாக உழைக்கும் ஒரு ஊழியனுக்கு அவனுடைய ஊதியத்தைவிட பெரும் மகிழ்ச்சி இந்த உலகில் வேறேதும் இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா..?உண்மையில் அவனுடைய ஒவ்வொரு வியர்வைத்துளிகளுக்குப் பின்பும் அவனுடைய குடும்பத்தின் சந்தோஷம் மறைந்திருப்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கின்றது.அதற்காக பணம் மட்டுமே எல்லாம் என்றும் என்னால் கூறமுடியாது.ஆனால் இங்கு பல்வேறு காரியங்கள் பணத்தால் மட்டுமே நடக்கின்றது என்பதையும் என்னால் மறுக்க முடியாது.
உண்மையிலேயே நீங்கள் உலகப்பற்றறவர்களாக இருக்கலாம்,ஆனால் நீங்களும் பணம் ஆட்கொண்டு இருக்கும் இந்த உலகிலேயே வாழ வேண்டிய கட்டாயமிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆம் அன்பர்களே..!வாழ்க்கை என்னும் விளையாட்டில் பணமே பல விதிகளை உறுவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.அதற்காக பணத்தை கட்டிக்கொண்டு அழவேண்டும் என்பதாகவும் என்னால் கூறமுடியாது.ஏனென்றால் பணம் நமக்காக ஒருபொழுதும் அழப்போவதில்லை.
ஆக பணம் சட்டைப்பையில் நிரம்பியிருப்பது என்பது தவறே இல்லை என்பதே எனது கருத்தாகும்.ஆனால் அது உங்களுடைய மனதை ஆட்கொண்டுவிடுவது என்பது மிகப்பெரும் ஆபத்தாக இருக்கின்றது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு கடமைபட்டிருக்கின்றேன்.ஆகவே அன்பர்களே.ஒன்று பணத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முயற்சியுங்கள்.இல்லையானால் பணத்தால் நடைபெறும் நாடகங்களை எல்லாம் கண்டும் காணாதவர்களாக வாழ்கையை கடத்த கற்றுக்கொள்ளுங்கள்.அடுத்தபடியாக நீங்கள் பணக்காரர் ஆவதற்கான இரண்டாவது வழி.
2.பல்வேறு வழிகளில் வருமானம் தரும் வியாபாரம் செய்வதே.
ஆம் அன்பர்களே!நாம் பெரும் செல்வமுடையவர்களாக ஆவதற்கு பல வழிகளில் வருமானம் தரும் வியாபாரத்தில் இறங்குவது மட்டுமே சிறந்த வழியாகும்.நம்மில் பலரும் ஏமாற்றினால்தான் பெரும் செல்வத்தை பெற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.மேலும் அதனால்தான் தாங்கள் இதுவரை ஏழையாகவே இருக்கின்றோம் என்பதாகவும் கூறி தங்கள் மனதை தேற்றிக்கொள்கின்றனர்.இது அவர்களின் இயலாமை,மற்றும் அறியாமையின் வெளிப்பாடு என்பதாகவே நான் கருதுகின்றேன்.
ஏனென்றால் நேர்மையாக இருப்பதால் மட்டுமே வியாபாரத்தில் மிகப்பெரும் உச்சத்தை அடையமுடியும் என்பது வியாபார யுக்தியின் அடிப்படை விதியாக இருக்கின்றது.இன்றைக்கு வியாபாரத்தில் கொடிகட்டிப்பரப்பவர்களில் பலரும் நேர்மையாக உழைப்பவர்களே என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டிக் கொள்கின்றேன். அவ்வாறே நம்மில் சிலர் பெரும் செல்வத்தை அடைய அறிவும்,திறமையும் நிறைந்திருக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டு பெரும் செல்வத்தை தேடுவதைவிட்டும் ஒதுங்கிக்கொள்கின்றனர்.
வியாபாரத்தில் வெற்றிபெற அறிவும்,திறமையும் வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றை வளர்த்துக்கொள்ள நம் எல்லோராலும் முடியும் என்பதும் 100 % உண்மையே என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.ஆக இன்றைக்கு பெரும் செல்வத்தை திரட்ட முடியாதவர்களின் பெரும்பாலான எண்ண ஓட்டங்கள் மேலே நான் குறிப்பிட்டுக் காட்டியவைகளாகவே இருக்கின்றது.மேலும் அவர்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் அந்த எண்ணங்களே முக்கிய காரணமாகவும் இருக்கின்றது என்பதும் நிதர்சனமான உண்மையாகவும் இருக்கின்றது.
ஆகவே அன்பர்களே..!
நீங்கள் செல்வ பணக்காரராக விரும்பினால் நிச்சயம் நீங்கள் வியாபாரம் என்னும் கலத்தில் குதிக்கத்தயாராக இருக்க வேண்டும்.மேலும் அவ்வியாபாரத்தில் முதலீடு செய்யும் அளவிற்கு உங்களிடம் மன தைரியமும் இருக்க வேண்டும்.சிறியதோ பெறியதோ முதலீடு செய்து வியாபாரம் செய்ய நீங்கள் தயாரானால் மட்டுமே செல்வசெளிப்பை அடைவதற்கான அடுத்த படியை உங்களால் கடக்க முடியும் என்பதே எனது ஆழமான பார்வையாகும்.
முதலீடு செய்து வியாபாரம் செய்ய நீங்கள் தயாராக இல்லையெனில் தயவு செய்து நீங்கள் பணக்காரராக வேண்டும் என்ற கனவை ஓரமாக வைத்துவிடுங்கள் என்பதே எனது தாழ்வான வேண்டுகோளாகும்.நம்மில் பலரும் கஷ்டப்பட்டு சம்பாரித்துவிடுகின்றோம்.ஆனால் அதனை இரட்டிப்பாக்கும் கலையை கற்க மறந்துவிடுகின்றோம்.பல சமயங்களில் அதனை பூட்டி வைத்து பாதுகாப்பதிலேயே கவனமும் செலுத்துகின்றொம். இதனையே நான் ஏழைகளின் பண்பாக நான் கருதுகின்றேன்.
ஆனால் செல்வ செளிப்புடையவர்கள் அவ்வாறு செய்வது கிடையாது.மாறாக அவர்கள் தங்களின் தேவைக்குத்தவிர்த்து மீதியை தைரியமாக வேறொரு வியாபாரத்தில் முதலீடு செய்யத்தயாராக இருக்கின்றார்கள்.இதானால் அவர்களால் பெரும்பாலும் தங்களுடைய வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும் முடிகின்றது.
ஆகவே அன்பர்களே நீங்கள் செல்வ செழிப்பு மிக்கவர்களாக ஆக வேண்டுமானால் உங்கள் செல்வத்தை பல்வேறு வழிகளில் வருமானத்தை ஈட்டும் வியாபாரங்களில் முதலீடு செய்ய தயாராக இருங்கள்.இதுவே உங்களை பணக்காரர் ஆக்குவதற்கான முக்கிய சூட்சமமாக இருக்கின்றது என்பதை மறந்துவிடாதிர்கள்.இதனை தொடர்ந்து மேலும் வியாபாரம் மற்றும் அதன் நுனுக்கங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற என்னுடைய புத்தகத்தை கட்டாயம் வாசியுங்கள்.அதில் நான் பல்வேறு நுனுக்கங்களை மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கின்றேன்.பின்வரும் கேள்விகளுக்கான பதிகள்களையும் என்னுடைய அப்புத்தகத்தில் மிக விரிவாக எழுதியிருக்கின்றேன்.
வியாபாரத்தை எவ்வாறு தொடங்குவது..?
வியாபாரத்தை எவ்வாறு இரட்டிப்பாக்குவது..?
தரமான பொருள்-Product
சந்தைப்படுத்துதல்-Marketing
வாடிக்கையாளர்களை எவ்வாறு கவருவது?
வியாபாரத்தை எவ்வாறு நஷ்டமின்றி பாதுகாப்பது.?
நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது.?
முதலீடேயின்றி செல்வந்தர் ஆகலாமா..?
பணத்தை எவ்வாறு சேகரிப்பது..?
ஏழையும் பணக்காரனும் ..!